தமிழகத்தில் பணநாயகத்திடம் விழுந்து கிடக்கும் ஜனநாயகத்தை மீட்டெடுக்குமா?ரஜினியின் அரசியல்

Rajnikanth’s Political Entry

Story Highlights

  • ரஜினி இளமை பருவம்
  • பிழைப்பு தேடி வந்த இடத்தில் சூப்பர் ஸ்டாரானவர்
  • வாய்ஸ் ஆப் ரஜினி
  • எம்.ஜி.ஆர். ,கலைஞர் மற்றும் ஜெயலலிதா
  • இதோ………அதோ………என்ற வார்த்தைக்கு முற்று புள்ளி வைத்த Dec 31
  • ரஜினியின் பலம் மற்றும் பலவீனம் என்ன?
  • சிவாஜி & விஜயகாந்த் தோற்றது ஏன்?
  • ரஜினி செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும் என்ன?
ரஜினி இளமை பருவம்

டிசம்பர் 12 1950 அன்று  கர்நாடகத்தில் திரு.ராமோசி ராவ் திருமதி.காயக்வாடுக்கும் ரமாபாய்க்கும் நான்காவது குழந்தையாகப் பிறந்தார். அவருக்கு ஐந்து வயதான பொழுதே தன் தாயை இழந்தார். பெங்களூரில் ஆசாரிய பாடசாலை, மற்றும் விவேகானந்த பாலக சங்கம் ஆகியவற்றில் கல்வி கற்றார். படித்து முடித்தவுடன் பெங்களூரில் பேருந்து நடத்துனராக பணியாற்றினார். இந்த காலகட்டத்தில் பல மேடை நாடகங்களில் பங்கு கொண்டதால் அவரின் மனதில் நடிக்கும் ஆசை வளர்ந்தது.


பிழைப்பு தேடி வந்த இடத்தில் சூப்பர் ஸ்டாரானவர்.

மனதில் ஆசையோடும்,கனவுகளோடும் திரைப்பட வாய்ப்புகளை தேடி சென்னை வந்து தன் நண்பர் ராஜ் பகதூர் உதவியோடு சென்னை திரைப்பட கல்லூரியில் பயின்றார்.

1975 ல் கே.பாலசந்தர் இயகத்தில் ஆபுர்வ ராகங்கள் படத்தில் சிறு வேடத்தில் நடித்தனம் மூலம் திரையுலகத்தில் அடியெடுத்து வைத்தார்.

கதா சங்கமா,மூன்று முடிச்சு,16வயதினிலே,அவர்கள் போன்ற படங்களில் தொடர்ந்து வில்லன் கதாப்பாத்திரத்தில் நடத்தார். இதை தொடர்ந்து “புவனா ஒரு கேள்விக்குறி”, “முள்ளும் மலரும்”போன்ற படங்களில் மூலமாக மெல்ல மெல்ல நல்ல கதாப்பாத்திரத்தில் நடிக்க துவங்கினார்.

பில்லா, போக்கிரி ராஜா போன்ற படங்கள் ரஜினியை அதிரடி நடிகராக வெளிப்படுத்தியது, ரஜினியின் 100வது படமான ஸ்ரீ ராகவேந்திரா படம் அவருக்கும் ஆன்மிகத்திற்கு உள்ள நெருகத்தை வெளிபடுத்தியது.

1990களில் வெளிவந்த அண்ணாமலை,பாட்ஷா,படையப்பா போன்ற படங்கள் ரஜினியின் புகழை உச்சத்திலேயே தக்க வைத்து கொண்டது.

2005பிறகு வெளி வந்த சந்திரமுகி,சிவாஜி,எந்திரம் மற்றும் கபாலி போன்ற படங்கள் தமிழ் திரையுலகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினி என்பதை உணர்த்தியது.

பிழைப்பு தேடி சென்னை வந்த ரஜினி தான் இன்று ஆசியாவிலேயே ஜாக்கி ஜானுக்கு பிறகு அதிகம் ஊதியம் பெரும் திரைப்பட நடிகர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


வாய்ஸ் ஆப் ரஜினி

தமிழகத்தை பொறுத்த வரையில் அரசியலும் சினிமாவும் இரட்டை குழல் துப்பாகியை போன்றது, சினிமாவில் உச்சத்தில் இருக்கும் நடிகர் அரசியலிலோ அல்லது அரசியலைப் பற்றியோ பேசிய தீர வேண்டும் என்பது எழுத படாத விதியாக ராஜாஜி காலம் தொட்டே இருக்கின்றது, இதில் ரஜினி என்ன விதி விலக்கா? 1990ல் இருந்து வெளி வந்த படங்களில் ரஜினியின் அரசியல் வாடை தெரிந்தாலும் 1996 ஆம் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் +அதிமுக கூட்டணிக்கு எதிராக தமிழக மக்களிடம் மீண்டும் “அதிமுக ஆட்சி” அமைத்தால் தமிழ் நாட்டை ஆண்டவனால கூட காப்பாற்ற முடியாது என்று ரஜினி கொடுத்த வாய்ஸ் தான் திமுக +தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைத்தது.

1996 தேர்தலுக்கு வாய்ஸ் கொடுத்ததோடு சரி ரஜினி எந்த வித அரசியலிலும் ஈடுப்படவில்லை, தொடர்ந்து திரைப்படங்களில் படங்களில் நடித்து கொண்டே இருந்தார்.

இதை தொடர்ந்து திரைப்படத்தில் புகைபிடிக்கும் காட்சிகள் தொடர்பாக பாமகவோடு ரஜினி ரசிகர்களுக்கு மோதல் வெடித்தது, அதனால் பாமக இடம் பெற்று இருந்த திமுக கூட்டணிக்கு எதிராக 2004தேர்தலில் அதிமுக+பாஜக கூட்டணிக்கு ஆதரவாக தான் ஒட்டு அளிப்பதாக வெளிபடையாக கூறினார்,ஆனால் இதை மக்கள் ரஜினி வாய்ஸ் என்று பார்காமல் திமுக கூட்டணியை வெற்றி பெற வைத்தனர்.


எம்.ஜி.ஆர். ,கலைஞர் மற்றும் ஜெயலலிதா

எம்.ஜி.ஆர், கலைஞர் மற்றும் ஜெயலலிதா இவர்களில் ஒருவர் தான் கடந்த 50 ஆண்டுகளாக தமிழக அரசியலுக்கு மாறி மாறி தலைமை தாக்கி வழி நடத்தியவர்கள், இதில் எம்.ஜி.ஆர் என்ற பெரிய ஆளுமைக்கு பிறகு ஜெயலலிதா என்கின்ற பெரிய தலைவி உருவெடுத்தார்.ஆனால் திமுக தலைவர் கலைஞர் அண்ணா மறைவுக்கு பிறகு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுடன் மாறி மாறி அரசியல் களத்தில் துடிப்போடு இருந்து கொண்டே இருந்தார்.

கடந்த Dec 5 தேதி அதிமுக பொது செயலாளர் ஜெயலலிதா மறைவு மற்றும் திமுக தலைவர் கலைஞர் உடல் நலக்குறைவால் தீவிரம் அரசியலில் இருந்து விலகல் போன்ற காரணத்தால் தமிழக அரசியலில் பெரிய தலைமைக்கான ஆளுமையின் வெற்றுயிடம் ஏற்பட்டு இருக்கின்றது.
மூப்பனார்,வைகோ,ராமதாஸ்,விஜயகாந்த்,அன்புமணி,திருமாவளவன் மற்றும் தேசிய கட்சிகளான காங்கிரஸ், பாஜக மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் இவ்மூவரை சார்ந்தோ அல்ல எதிர்த்தோ தான் அரசியல் செய்து கொண்டு இருந்தனர்.

இதில் ஜெயலலிதா மற்றும் கலைஞருக்கு பிறகு அந்த தலைமை ஆளுமையை பிடிக்க ஸ்டாலின்,சசிகலா,தினகரன், பன்னீர்செல்வம்,எடப்பாடி,சீமான்,நடிகர் கமல் போன்றவர்களும் ஏற்கனவே களத்தில் இருக்கின்ற வைகோ,விஜயகாந்த்,திருமாவளவன் உள்ளிட்டோர்களும் போட்டி போடுக்கின்றார்கள்.


இதோ………அதோ………என்ற வார்த்தைக்கு முற்று புள்ளி வைத்த Dec 31

1996 இல் இருந்து இதோ வருக்கின்றார் அதோ வருக்கின்றார் என்று மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரையுலகத்தின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தன்னுடைய 67 வயதில் தமிழக அரசியல் தலைமை ஆளுமைக்கு தான் வருவதாக போட்டியிட உள்ளதாகா முறைப்படி அறிவித்து இருக்கின்றார்.

1)பணம்,பதவி ஆசையில் தற்பொழுது அரசியலுக்கு வரவில்லை என்றும் அந்த ஆசை இருந்திருந்தால் 20 வருடங்களல் முன்பே வந்து இருப்பேன் என்றும்,

2)இன்று தமிழகத்தை பார்த்து மற்ற எல்லாரும் சிரிப்பதாகவும்,நிர்வாகம் சீர்குலைந்து உள்ளதாகவும் அதை பார்த்தும் அரசியலுக்கு வரவில்லை என்றால் தன்னுடைய மனசாட்சி கொன்று விடும் என்பதால் இன்று அரசியல் அறிவிப்பை வெளியிடுவதாகவும் ,

4)சாதி மத பேதமாற்ற சமதர்ம ஆன்மிக அரசியலை முன்னெடுப்பதாகவும்,

5)அறிக்கை விடவும் போராட்டம் நடத்தவும் வரவில்லை என்றும்,

6)சட்டமன்ற தேர்தலுக்கு முன்பாக கட்சி துவங்கி 234 தொகுதியிலும் போட்டியிடுவேன் என்றும்

7)அது வரை யாரையும் திட்டி அறிக்கையோ அல்லது விமர்சனமோ செய்ய மாட்டேன் என்றும்

ரசிகள் மத்தியில் தன்னுடைய அரசியல் அறிவிப்பின் பொழுது ரஜினி பேசியதில் கூறிப்பிடத்தக்கது வார்த்தைகள்.


ரஜினியின் பலம் மற்றும் பலவீனம் என்ன?

இவை ரஜினியின் பலம்.

1) 80களில் தொடங்கி இன்று வரை திரையுகத்தின் சூப்பராக ஸ்டாராக புகழின் உச்சத்தில் இருப்பதால் பெரியவர்கள் முதல் குழந்தைகள் வரை அறிப்பட்டு இருப்பது.

2) திரையுலகில் எந்த சர்ச்சையிலும் சிக்கி பெயரை கெடுத்து கொள்ளாமல் இருப்பது.

3)மிகவும் எளிமையாக, இயல்பாகவும், பொறுமையாகவும் இருப்பது.

4)தமிழகத்தில் ஜெயலலிதாவிற்கு பிறகு ஆத்திக(அன்மீக சிந்தைனை) தலைவர் என்ற இமேஜ்

5)எல்லா தரப்பிலும் நண்பர்களை கொண்டு இருப்பது.

6)20 ஆண்டுகளாகவே ரஜினி வரார் வரார் என்று மக்கள் மத்தியில் இருக்கும் எதிர்பார்பு

7) பிரதமர் மோதி ஆதரவு உள்ளதாக சொல்லப்படுவது.

8)ஊடகங்களின் மிகபெரிய கவரேஜ்

9) சொன்னதை செய்யவில்லை என்றால் மூன்று ஆண்டுகளில் ராஜினாமா செய்து விடுவேன் என்று கூறி இருப்பது.

இவை ரஜினியின் பலவீனம்.
1) தமிழினவாதிகளால் வேறுமாநிலத்தவர் என்று முன் வைக்கப்படும் விமர்சனம்

2) 67 வயது என்பது

3)பாஜகவின் ஊதுகுழல் என்றும் மோடியின் நண்பர் என்றும் முன் வைக்கபடும் வாதம்.

4)சமூக ஊடகங்களில் வரும் எதிர்மறையான விமர்சனம்.

5)அரசியலில் எதிரி யார் என்று அறிவிக்காதது.

6) தனிக் கட்சி தொடங்கினாலும் ரஜினியை தாண்டி பிரபலமான இரண்டாம் கட்ட தலைவர்கள் இல்லாதது.

7) நிறைய இடங்களில் பெயரளவிற்கு மட்டும் இருக்கும் ரசிகர் மன்றம்.

8)பெரியார் மண் என்னும் தமிழகத்தில் ஆன்மிக வழி அரசியல் என்று வெளிபடையாக கூறி இருப்பது.

9)பணமில்லாதது 


சிவாஜி & விஜயகாந்த் தோற்றது ஏன்?

எம்.ஜி.ஆர் காலத்திலேயே திரையுகத்தில் அவருடன் போட்டி போட்டு நடித்தவர் சிவாஜி கணேசன். ஆனால் அரசியலில் எம்.ஜி.ஆரும் சிவாஜியும் நேர் எதிராக கொள்கை கொண்டவர்கள் அரசியல் களத்தில்.

ஆனால் எம்.ஜி.ஆர் மக்களை கவரும் வேடத்தை ஏற்று நடித்ததால் சிவாஜியை விட மக்கள் மனதில் ஆழமாக இடம் பிடித்தார், ஆனால் சிவாஜி நடிப்பில் செலுத்திய திறமையை மக்கள் மனதில் இடம் பெற செலுத்தவில்லை.

எம்.ஜி.ஆர் மறைவுக்கு பிறகு சிவாஜி கட்சி ஆரம்பித்தாலும் வலுவாக இருந்த திராவிட கட்சியின் அடிதளத்திற்கு ஈடாக சிவாஜியின் புதிய கட்சி இல்லை என்பதால் தேர்தலில் தோல்வி அடைந்தார்.

தமிழ் திரையுகத்தில் தனகென ஒரு இடத்தை பிடித்த விஜயகாந்த் நன்கு திட்டமிட்டு அதிமுக & திமுகவிற்கு மாற்றாக தேமுதிகவை துவங்கினாலும் தோல்வி தான் அடைந்தார்.

அதிமுக & திமுகவிற்கு மாற்று என்று கூறிவிட்டு அதிமுகவோடு கூட்டணி அமைத்ததும், பொது இடத்தில் அடிக்கடி கோபம் அடைந்ததும் தேர்தலுக்கு தேர்தல் கூட்டணியை மாற்றி அமைத்தும் அவரின் தோல்விக்கு காரணமாகும்.


ரஜினி செய்ய வேண்டியதும் செய்ய கூடாததும் என்ன?

1)தெளிவான கொள்கைகளை வகுத்து யாரை எதிர்தது இந்த அரசியல் பயணம் என்பதை தெளிவாக விளக்க வேண்டும்.

2) உடனடியாக கட்சியின் பெயரை அறிவித்து பூத் வாரியாக அமைப்பை பலப்படுத்த வேண்டும்.

3) ஊடகங்கள் & மற்றும் சமூக ஊடங்களில் எதிர்மறை விமர்சனம் எழும் முன்பே அதை முறியடிக்க தெளிவான கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும்.

4) தமிழகத்தில் இதுவரை இருக்கும் அரசியல் கட்சிகளை விட எந்த விதத்தில் தான் மாற்று என்பதை விளக்க வேண்டும்.

5)கட்சி நிதி பற்றிய வெளிபடையான அறிவிப்பு இருக்க வேண்டும்.

இவை ரஜினி செய்ய வேண்டியதாகும்.

1) அரசியல் களத்தில் வேறு கட்சியில் புகாரில் சிக்கியவர்களை தன்னுடைய பதிய கட்சியில் சேர்காமல் இருக்க வேண்டும்.

2) கட்சி நிதியாக எந்த நிறுவனத்திடமோ அல்லது பெரிய பணகாரரிடமோ நன்கொடை பெறாமல் இருக்க வேண்டும்.

3)ஒரு தேர்தலை வைத்து எந்த முடிவு எடுக்க கூடாது.

4)வாரிசுகளை தலையிட அனுமதிக்க கூடாது

5)தனித்து மட்டுமே தேர்தலை சந்திக்க நினைக்க கூடாது.

இவை ரஜினி செய்ய கூடாதவையாகும்

கடந்த 50 ஆண்டுளாக ஊழல் மலிந்த திராவிட கட்சிகளுக்கு மாற்று இல்லையே என்றும் தற்பொழுது தமிழகத்தில் ஏற்பட்டு இருக்கின்ற அசாதாரணமான அரசியல் சூழ்நிலையில் ரஜினியின் அரசியல் வருகை எதிர்பார்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

திருமங்கலம் தொடங்கி RK நகர் வரை இடைத்தேர்தலில் பணம் கொடுப்பதை எங்களால் முழுமையாக தடுக்க முடியவில்லை என்று தேர்தல் ஆணையமே கூறி இருப்பதால்,தமிழக மக்கள் மனதில் பணநாயகத்திடம் ஜனநாயகம் தோற்றுவிட்டது என்று ஏற்பட்டு இருக்கின்ற அவநம்பிக்கையை மாற்றி ஊழல் இல்லாத சாதி மாத பேதங்கள் இல்லாத தமிழக ஆட்சியை ரஜினியின் அரசியல் வருகையால் தமிழகம் பெறுமா?என்ற கேள்விக்கு காலம் தான் பதில் சொல்ல வேண்டும்.

Tags

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker