அன்று கல்லூரியில் சேர பணமில்லாமல் தவித்தவர் இன்று ஹிமாசலின் புதிய முதல்வர்

....தலையெழுத்தை மாற்றிய ABVP

Story Highlights

  • தலையெழுத்தை மாற்றி எழுதிய ABVP
  • அரசியல் பயணம்
  • தேர்தல் பயணம்
  • குடும்பம் வாழ்க்கை

இமாச்சல் மாநிலத்தின் 13-வது முதல்வராக ஜெய்ராம் தாக்கூர் 10பேர் கொண்ட அமைச்சரவையுடன் பதவியேற்றுக்கொண்டார். கவர்னர்  ஆச்சாரியா தேவ் வ்ராட் பதவிப்பிரமாணம் மற்றும் ரகசியகாப்பு பிரமாணம் செய்து வைத்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த இமாச்சல் மாநில சட்டசபை தேர்தலில் மொத்தம் உள்ள 68 இடங்களில் பா.ஜ.க. 44 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மை பலத்தை பெற்றது. இந்த தேர்தலில் பா.ஜ.க. சார்பில் முதல் அமைச்சர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருந்த பிரேம் குமார் துமால் சுஜான்பூர் தொகுதியி காங்கிரஸ் வேட்பாளரிடம் தோல்வி அடைந்தார்.

இதைதொடர்ந்து அம்மாநிலத்தின் புதிய முதலமைச்சராக ஜெய்ராம் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டார். இதனைத்தொடர்ந்து ஹிமாசல் மாநிலத்தின் 13வது முதல்வரானர் ஜெய்ராம் தாகூர்.

தலையெழுத்தை மாற்றி எழுதிய ABVP

கல்லூரியில் சேர பணயில்லாமல் 2வருடங்கள் பொறுத்து மண்டி அரசு கல்லூரியில் BA சேர்ந்தார்.அப்பொழுது தான் RSS மாணவர் அமைப்பான ABVP யின் அறிமுகம் கிடைத்தது, அந்த அறிமுகத்தை கொண்டு கல்லூரியில் மாணவ சங்க தேர்தலில் வெற்றி பெற்றார்.பிறகு தொடர்ந்து ABVP யில் தீவிரமாக களப்பணியாற்றியதால் இமாசல் மாநிலத்தின் ABVP மாநில இணை செயலாளர், மாநில செயலாளர் மற்றும் ஜம்மு &காஷ்மீர் மாநில அமைப்பு செயலாளராக பொறுப்பு ஏற்று பணியாற்றினார்.

அரசியல் பயணம்

1989 ஆம் முதல் 93வரை இமாசல் மாநில இளைஞர் அணி செயலாளராகவும் 1993முதல் 95 மாநில இளைஞர் அணி தலைவராகவும் பணியாற்றினார்.

2000-2003 பாஜக மாண்டி மாவட்ட தலைவராகவும்,பிறகு மாநில துணை தலைவர் மற்றும் ஹிமாசல் பாஜக தலைவராக 2006-2009பணியாற்றியவர்.

தேர்தல் பயணம்

முதல் முதலாக 1993 தேர்தலில் பாஜக சார்பாக போட்டியிட்டு தோல்வி அடைத்தாலும் 1998 முதல் தொடர்ந்து 5வது முறையாக செராஜ் சட்டமன்ற தொகுதியில் இருந்து வெற்றி பெற்று வந்து கொண்டு இருக்கின்றார் , முந்திய பிரேம்குமார் துமால் ஆட்சியில் ஹிமாசல் மாநில ஊரக மற்றும் பஞ்சாயத் ராஜ்ஜிய துறை அமைச்சராக பணியாற்றியவர். 2013 ஹிமாசலில் நடைப்பெற்ற மக்களாவை இடைத்தேர்தலில் காங்கிரஸ் முதல்வர் வீரபத்திர சிங் மனைவியிடம் போட்டியிட்டு தோற்றது குறிப்பிடத்தக்கது.

குடும்பம் வாழ்க்கை

ஜனவரி 6 ,1965 ஆண்டு தண்டி கிராமத்தில் ராஜ்புட் குடும்பத்தில் பிறந்தவர் ஜெய்ராம் தாக்கூர்
ஆனாலும் அவரின் குடும்பத்திற்கு விவசாயம்தான் முக்கிய தொழில்

அவருக்கு இரண்டு சகோதரர் மற்றும் இரண்டு சகோதரிகள் ஜெய்ராம் இளைய குழந்தை, அவரது சகோதரனைவிட சிறந்த கல்வி பெற இதுவே உதவியது.பள்ளி படிப்பை முடித்து கல்லூரியில் சேர பணம் இல்லாமல் 2வருடங்கள் தன்னுடைய பெற்றோருக்கு உதவியாக பணியாற்றி கொஞ்சம் பணம் சேர்த்து பிறகு கல்லூரியில் சேர்தார்.

ஜெய்பூரை சார்ந்த சதானா தாக்கூர் என்னும் மருத்துவரை திருமண செய்தார்.இரண்டு மகள்கள் உள்ளனர், இருவரும் ஹிமாசலில் மருத்துவம் படித்து கொண்டு உள்ளனர்.

ஏழ்மையின் காரணமாக கல்லூரி படிப்பில் சேரவே சிரமம்பட்டவர், கல்லூரி நாட்களில் ABVP யில் கிடைத்த அறிமுகத்தையும் அனுபவத்தையும் கொண்டு ஒரு மாநிலத்தின் முதல்வராக வந்து இருப்பது குறிப்பிட்டத்தக்கதாகும்.

ப.யுவராஜ்

வழக்கறிஞர்

 

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker