ஆதாரின் விர்ச்சுவல் ஐடி(Aadhaar Virtual ID) பற்றி முக்கிய அம்சங்கள்

விர்ச்சுவல் ஐடி என்பது சீரற்ற 16 இலக்க எண்ணாகும்.16 இலக்கம் கொண்ட இந்த விர்ச்சுவல் ஐடியை UIDAI இணைதளத்திலோ அல்லது mAadhaar செயலி மூலமாகவோ லாக்இன் செய்து பெற்றுக்கொள்ள

இது நிரந்தரமான எண் கிடையாது தற்காலிகமானதுதான். ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் விர்ச்சுவல் ஐடியை உருவாக்கிக்கொள்ளலாம்.

இந்த விர்ச்சுவல் ஐடி ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடியதாக இருக்கும். விர்ச்சுவல் ஐடி வேண்டாம் என்றால் ஆதார் எண்ணையே பயன்படுத்தலாம்.

ஆதார் எண்ணிற்கு உறுவாக்காப்படும் விரிசூவல் ஐடியானது சில நாட்கள் மட்டுமே இயங்கும் பின்னர்ப் புதிய விரிச்சுவல் ஐடியினை உருவாக்க வேண்டும்.

இந்த விர்ச்சுவல் ஐடியை ஆதார் பயனாளர் மட்டுமே உருவாக்க முடியும். ஆதார் ஏஜென்சி உட்பட வேறு யாராலும் விர்ச்சுவல் ஐடியை உருவாக்குவதற்கு அனுமதி கிடையாது. ஜூன் 1-ம் தேதி முதல் ஆதார் சேவைகளைப் பயன்படுத்தும் அனைத்து நிறுவனங்களும் இந்த விர்ச்சுவல் ஐ.டி.யைப் பயன்படுத்தும் கட்டமைப்புகளை கட்டாயம் வைத்திருக்க வேண்டும். பொதுமக்களுக்கு இது விருப்பத்தேர்வுதான். ஆதார் எண்ணையும் பயன்படுத்தலாம்; விர்ச்சுவல் ஐடியையும் பயன்படுத்தலாம்.

இந்த விர்ச்சுவல் ஐடி மூலமாக ஒருவரின் ஆதார் எண் பொது வெளியில் பகிரப்படுவது தடுக்கப்படும் எனக் கூறும் தேசிய தனிநபர் அடையாள ஆணையம், இதை அனைத்து நிறுவனங்களும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

Tags

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker