ஜூனியர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றுள்ளது.

19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் நியூசிலாந்தில் நடைபெற்று வருகிறது. லீக் ஆட்டங்கள் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா அணிகள் அரையிறுதிக்கு முன்னேறின.

நேற்று நடைபெற்ற முதல் அரையிறுதி போட்டியில் ஆப்கானிஸ்தானை வென்ற ஆஸ்திரேலியா அணி இறுதி போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில், 2-வது அரையிறுதி போட்டி நியூசிலாந்தின் கிறிஸ்ட்சர்ச் நகரில் இன்று நடைபெற்றது. இந்த போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின.

இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்திய அணி, சுப்மன் கில்லின் அசத்தல் சதத்தின் உதவியால் 272 ரன்கள் குவித்தது. இதையடுத்து, களமிறங்கிய பாகிஸ்தான் இந்திய வேகங்களின் சிறப்பான பந்துவீச்சில் தாக்குப்பிடிக்க முடியாமல் நிலைகுலைந்தது. முடிவில் 69 ரன்களுக்கு பாகிஸ்தான் ஆட்டமிழக்க, 203 ரன்கள் வித்தியாசத்தில் வென்று இறுதிப் போட்டிக்கு பிரித்வி ஷா தலைமையிலான இந்திய அணி தகுதிபெற்றது. இந்திய அணி தரப்பில் இஷான் போரெல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். சுப்மன் கில் மற்றும் இஷான் போரெல் ஆகியோருக்கு பாராட்டுகள் குவிந்துவரும் நிலையில், இந்திய ஜூனியர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் பாராட்டு மழையில் நனைந்துவருகிறார்.

Tags

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker