Short News 60 Second Now | 28/12/2017

நொடிக்கு நொடி தமிழ் செய்திகள்

மன்மோகனுக்கு 2G புரியவில்லை …அதன் பலனை அவரே அனுபவித்தார் ……கோவையில் ஆ.ராசா பரப்பரபு குற்றாச்சாட்டு


மீனவர்களுக்கு தனி அமைச்சகம் அமைக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை


தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் முன்ஜாமீன் முனுவை ஜனவ 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது உயர்நீதிமன்றம்


ஆப்கனின் கலாசார மையத்தில் அடுத்தது அடுத்து குண்டு வெடிப்பு ,40பேர் பலி மற்றும் 30பேர்களுக்கு மேல் காயமடைந்து உள்ளதாக ,ஆப்கான் உள்துறை செய்தி தொடர்பாளர் தகவல்


தினகரன் வெற்றி பெற்ற பரப்ரப்பான அரசியல் சூழ்நிலையில் வரும் 8ஆம் தேதி கூடுக்கின்றது தமிழக சட்டமன்றம்


மதவாத பாஜகவுடன் இணக்கமாக இருந்ததால் தான் RK நகர் இடைதேர்தலில் அதிமுகவிற்கு தோல்வி ஏற்பட்டது ……தமிழக அமைச்சர் செல்லூர் ராஜூ


மாதந்தோறும் காஸ் சிலிண்டர் விலை உயர்த்தும் முடிவு ரத்து

 மாதந்தோறும் விலை உயர்த்தியது மக்கள் மத்தியில் எதிர்மறை தாக்கத்தை ஏற்படுத்தியது. ஒரு பக்கம் ஏழை மக்களுக்கு இலவச காஸ் இணைப்புகளை வழங்கிவிட்டு மறுபுறம் விலை, மாதந்தோறும் உயர்த்தப்படுவதாக பேச்சு எழுந்தது. இதனையடுத்து விலையை உயர்த்துவது ரத்து செய்யப்பட்டது. கடந்த அக்டோபர் மாதம் இந்த முடிவு எடுக்கப்பட்டது. அதன் பிறகு விலை உயர்த்தப்படவில்லை. வரி காரணமாகவே தற்போது விலை உயர்த்தப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

புத்தாண்டை முன்னிட்டு தேசிய அளவிலான கைத்தறி கண்காட்சி துவங்கியது!

புத்தாண்டு மற்றும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னை, கலைவாணர் அரங்கத்தில் 28.12.2017 முதல் 11.01.2018 முடிய 15 நாட்கள் கைத்தறி துணிகளின் தேசிய அளவிலான கைத்தறி கண்காட்சி தொடங்கியுள்ளது. இக்கண்காட்சியினை கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன் அவர்கள் இன்று (28.12.2017) காலை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்து முதல் விற்பனையையும் துவக்கி வைத்தார்.


ஆந்திர உருது கதாசிரியர் முகமது பைக் எக்சாசுக்கு சாகித்ய அகாடமி விருது

இந்த ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருதுக்கு முகமது பைக் எக்சாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ‘துக்மா’ என்னும் தலைப்பில் அவர் எழுதிய சிறுகதைக்காக இந்த விருது அளிக்கப்பட்டுள்ளது.
அடுத்தாண்டு பிப்ரவரி 12-ம் தேதி நடைபெறும் விருது வழங்கும் விழாவில் 7 நாவல் ஆசிரியர்கள், ஐந்து கவிஞர்கள், ஐந்து சிறுகதை எழுத்தாளர்கள், ஐந்து இலக்கிய விமர்சனங்கள், ஒரு நாடகம் மற்றும் ஒரு கட்டுரைக்கு உட்பட 24 விருதுகள் வழங்கப்பட உள்ளன.

நீட் தேர்வால் உயிரிழந்த அனிதா குடும்பத்திற்கு ரூ.7 லட்சம்: சகோதரருக்கு அரசு வேலை – முதலமைச்சர்

அனிதாவின் குடும்பத்திற்கு தமிழ்நாடு அரசின் நிதி உதவியாக 7 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இன்று அவரது தந்தை சண்முகத்திடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.மேலும், அவரது சகோதரர் சதிஷ்குமாருக்கு சுகாதாரத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தமிழ்நாடு மூலிகைப் பண்ணைகள் மற்றும் மூலிகை மருந்துக் கழகத்தில் (டாம்ப்கால்) இளநிலை உதவியாளராக பணியமர்த்தம் செய்து, அதற்கான பணி நியமன ஆணையினை சதிஷ்குமாரிடம் வழங்கினார்.


நீர்நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்குத் தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னையில் பக்கிங்காம் கால்வாய்க் கரையிலும், கூவம் ஆறு, அடையாறு கரைகளிலும் வாழும் மக்களை அங்கிருந்து அகற்றத் தடை விதிக்கக் கோரியிருந்தார். மறு குடியமர்த்துதல், தேவையான வசதிகள் ஏற்படுத்தித் தருதல் போன்றவற்றை அரசு செய்வதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது. குடிசைவாழ் மக்களுக்கு எதிராக மட்டுமே அரசு நடவடிக்கை எடுப்பதாகவும், பெருநிறுவனங்களுக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.இந்த வழக்கு உயர்நீதிமன்ற விடுமுறைக் கால அமர்வில் நீதிபதிகள் ரமேஷ், சுவாமிநாதன் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது


யுக புருஷர் பாரத ரத்னா அடல் ஜி’: வாஜ்பாய் பற்றிய புத்தகத்தை துணை ஜனாதிபதி வெளியிட்டார்

வாஜ்பாயின் அருமை, பெருமைகள் மற்றும் அவரது ஆட்சி முறையின் சிறப்புகள் தொடர்பாக பா.ஜ.க. பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் ரமேஷ் பொக்ரியால் நிஷான்க் என்பவர் ‘யுக புருஷர் பாரத ரத்னா அடல் ஜி’ என்ற நூல் ஒன்றை இயற்றியுள்ளார்.

இந்த நூல் வெளியீட்டு விழா டெல்லியில் இன்று நடைபெற்றது. துணை ஜனாதிபதி வெங்கய்யா நாயுடு நூலினை வெளியிட்டு வாஜ்பாயை பற்றிய பல சுவாரஸ்யமான நினைவுகளை குறிப்பிட்டு வாழ்த்துரையாற்றினார்


உலக துரித செஸ் சாம்பியன்ஷிப்: இந்தியாவின் விஸ்வநாதன் ஆனந்த் பட்டம் வென்றார்


RS.499 க்கு BSNL மொபைல்…! அறிமுகமானது “D1”..! இன்றே முந்துங்கள்..!

BSNL நிறுவனம் Detel நிறுவனத்துடன் இணைந்து,D1 என்ற புதிய போனை அறிமுகம்  செய்துள்ளது.

மிகவும் மலிவான விலையில் RS.499 க்கு  BSNL  மொபைல் கிடைப்பதால், இந்த மொபைல் போனை வாங்குவதில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


பெரியபாண்டியன் மரணம் தொடர்பாக அழுது மன்னிப்பு கோரிய முனிசேகர் : உறவினர் பரபரப்பு தகவல்

பெரியபாண்டியனுக்கும் எந்த முன்விரோதமும் இல்லை அவர் எனது நண்பர் என கூறினார். எங்களிடம் அங்கு 3 பேர் இருப்பதாக கூறி தான் கூட்டி சென்றார்கள் ஆனால் அங்கு 10 க்கும் மேற்பட்டவர்கள கையில் கம்பு மற்றும் ஆயுதங்களுடன் இருந்தனர். நாங்கள் தப்பிக்கும் போது   பெரிய பாண்டி மட்டும்  மாட்டி கொண்டார். அவரை அவர்கள் தாக்கினர் அவரை காப்பாற்றவே அவர்களை நோக்கி சுட்டேன் அவர்கள்  பெரியபாண்டியை விட்டு விட்டு ஓடி விடுவார்கள் என எண்ணினேன் ஆனால் தவறுதலாக பெரியபாண்டியன் மீது குண்டு பாய்ந்தது. உடனடியாக நாங்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். தவறுதலாகத்தான்  அவர்மீது   குண்டு பட்டு  விட்டது என கூறி என்னிடம் மன்னிப்பு கேட்டார். என கூறினார்


மார்ச் 2019-க்குள் அனைத்து இல்லங்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும்: மத்திய மின் துறை மந்திரி

மின்சார விநியோகம் கிடைக்கப்பெறாமல் உள்ள 1694 இல்லங்களுக்கு  டிசம்பர் 2018-க்குள் மின் விநியோகம் வழங்கப்படும்.  இந்த வீடுகளுக்கும் மின் விநியோகம் வழங்க ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இதனால், வரும் மார்ச் 2019 ஆம் ஆண்டுக்குள் அனைத்து  வீடுகளுக்கும் மின் விநியோகம் வழங்கப்படும்.


புதிய சட்டம் இயற்றி 22 வருட வழக்கிலிருந்து விடுதலையான யோகி

நீண்ட காலமாக அரசியல்வாதிகள் மீது நிலுவையில் உள்ள சாதாரண வழக்குகளில் இருந்து அவா்களுக்கு பொதுமன்னிப்பு வழங்க வழிவகை சட்டம் கடந்த வாரம் உ.பி., மாநில சட்டசபையில் இயற்றப்பட்டது. இச்சட்டம் கடும் குற்றங்கள் தொடா்பான வழக்குகளுக்கு பொருந்தாது. இச்சட்டத்தை பயன்படுத்தி அரசியல்வாதிகளுக்கு எதிராக உள்ள சுமார் 20,000 வழக்குகள் திரும்ப பெறப்பட உள்ளது.


ஈபிஎஸ், ஓபிஎஸ் அதிரடி! அதிமுக உறுப்பினர்கள் திடீர் நீக்கம்!

டிடிவி ஆதரவாளர்கள் 46 பேர், அ.தி.மு.க.வில் இருந்து அடிப்படை உறுப்பினர் பொறுப்பு  உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக ஈபிஎஸ் மற்றும் ஓபிஎஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

டி.டிவி தினகரன் வி.கே சசிகலாவை சந்திக்க பெங்களூர் வந்துள்ளார்!!

ஆர்.கே.நகர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் 89,013 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். 50.32 சதவீதம் வாக்குகள் பெற்று டிடிவி தினகரன், ஆர்.கே.நகரில் ஜெயலலிதா பெற்ற வாக்கு சதவீதத்தை விட அதிகம் பெற்றார்.

இந்நிலையில்,வரும் 29-ம் தேதி டிடிவி தினகரன் எம்.எல்.ஏ.வாக பதவியேற்க உள்ளார். சபாநாயகர் தனபால் அவருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.

குல்பூஷண் விவகாரம்: சுஷ்மா சுவராஜ் விளக்கம்!!

பாராளுமன்றத்தில் குல்பூஷண் ஜாதவ் விவகாரம் தொடர்பாக நேற்று எதிர்கட்சிகள் எழுப்பிய கேள்விக்கு சுஷ்மா சுவராஜ் தற்போது விளக்கம் அளித்துள்ளார்.

ஆன்லைன் ஷாப்பிங் வர்த்தகத்தில் 60 சதவீத பொருட்கள் போலி

மக்கள் உட்கார்ந்த இடத்திலிருந்தே, தங்களுக்கு தேவையான மளிகை பொருட்களில் இருந்து, ஆடைகள், ஸ்மார்ட்போன், கம்ப்யூட்டர், லேப்டாப், படுக்கை விரிப்புகள் வரை வாங்க ஆன்லைன் ஷாப்பிங் நமக்கு பேரூதவி புரிகிறது. இதனால், பெரும்பாலான மக்கள், தற்போது இந்த வழிமுறையை பின்பற்ற துவங்கியுள்ளனர் என்பதற்கு எடுத்துக்காட்டாக, கடந்த தீபாவளி சீசனில் மட்டும் ரூ. 19 ஆயிரம் கோடி அளவிற்கு வர்த்தகம் நிகழ்ந்துள்ளது. இது கடந்தாண்டை ஒப்பிடும்போது 45 சதவீத கூடுதல் வளர்ச்சி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய ராணுவத்தில் 60 ஆயிரம் காலி பணியிடங்கள்: நிர்மலா சீதாராமன்

மத்திய பாதுகாப்புதுறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் அளித்த அறிக்கையில், இந்திய ராணுவத்தில் 60 ஆயிரம் பணியாளர்கள் பற்றாக்குறையாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.


ஜனவரி 8ல் கூடுகிறது தமிழக சட்டப்பேரவை!

ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் உரையாற்றுகிறார்.
பன்வாரிலால் ஆளுநராக பதவியேற்ற பின், முதல் முறையாக உரையாற்றுவது குறிப்பிடத்தக்கது. ஆளுநர் உரை தொடர்பான விவாதங்கள் மட்டுமே இடம்பெற வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது.


5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கான பாஸ்போர்ட்; சிறப்பு சலுகை 

மத்திய வெளியுறவுத்துறை இணையமைச்சர் வி.கே.சிங், கைக்குழந்தைகள் மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சலுகை ஒன்றை அறிவித்தார்

வெளிநாடுகளுக்குச் செல்வதற்கான இந்திய அரசின் அடையாளமாக பாஸ்போர்ட் வழங்கப்படுகிறது. இதனைப் பெறுவதற்கு பல்வேறு சான்றிதழ்கள் இணைத்து, 10 விரல்களின் கைரேகைகளையும் வழங்க வேண்டும்.


ஓகி புயல் நிவாரணமாக தமிழகத்திற்கு ரூ.133 கோடி விடுவிப்பு!

கடந்த மாதம் தென்தமிழகத்தை தாக்கிய ஓகி புயலால் கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. புயலின்போது, கடலுக்குச் சென்ற நூற்றுக்கணக்கான மீனவர்கள் மாயமாகினர்.

இந்நிலையில், சில தினங்களுக்கு முன் பிரதமர் மோடி தமிழகம், கேரளா மற்றும் லட்சத்தீவுகளில் ஓகி புயல் பாதிப்பு குறித்து பார்வையிட்டு, ரூ.325 கோடியை நிவாரணமாக வழங்க உத்தரவிட்டார்.


காவல் துறை டிஜிபி ஆணையருடன் முதல்வர் ஆலோசனை

தலைமைச் செயலகத்தில், முதல்வர் கே.பழனிசாமி தலைமையில், டிஜிபி டி.கே. ராஜேந்திரன், சென்னை பெருநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் மற்றும் உளவுப்பிரிவு ஐஜி சத்தியமூர்த்தி ஆகியோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில், தமிழக சட்டம்-ஒழுங்கு மற்றும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.


பொய்களை பயன்படுத்தி அரசியல் லாபம் அடையும் பாஜக: ராகுல் காந்தி குற்றச்சாட்டு

பொய்களை பயன்படுத்தி அரசியல் லாபமடைவதையே பாஜக அடிப்படையாக கொண்டுள்ளது என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார். தோற்றாலும் காங்கிரஸ் உண்மையை ஒருபோதும் விட்டுக்கொடுக்காது என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி கூறியுள்ளார். மக்களை சுற்றி ஏமாற்று வலை பின்னப்படுகிறது என்று காங்கிரஸ் 133 வது ஆண்டு விழாவில் ராகுல் பேசினார்


புத்தாண்டை ஒட்டி மெரினாவில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை

டிசம்பர் 31ல் சென்னையில் மெரினாவில் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. காமராஜர் சாலை, பெசன்ட் நகர் எலியட் சாலையில் டிசம்பர் 31 இரவு 9 மணி முதல் அதிகாலை 3 மணி வரை இரு சாலையிலும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


விளம்பரம் தேடும் நோக்கத்திலேயே செயல்படும் கிரண்பேடி : புதுவை முதல்வர் குற்றச்சாட்டு

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மக்களுக்கான திட்டங்களில் தலையிட துணைநிலை ஆளுநருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்றார். பொறுப்பு தெரியாமல் கிரண்பேடி நடந்து கொள்வதாகவும் நாராயணசாமி குற்றம்சாட்டியுள்ளார்.


ஜெருசலேத்தில் ட்ரம்ப் பெயரில் ரயில் நிலையம் 

ஜெருசலேம் நகரில் அமைய உள்ள சுரங்க ரயில் நிலையம் ஒன்றிற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்பின் பெயரை வைக்க விரும்புவதாக இஸ்ரேல் போக்குவரத்து துறை அமைச்சர் கட்ஸ் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த மாதம் இஸ்ரேலின் தலைநகராக ஜெருசலேமை அங்கீகரித்து  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். மேலும் அங்கு அமெரிக்க தூதரகத்தை அமைக்கவும் உத்தரவிட்டார்.


2017ஆம் ஆண்டு உயர்தரப் பரீட்சை பெறுபேறு! அகில இலங்கை ரீதியில் யாழ். மாணவன் முதலிடம்

யாழ். ஹாட்லி கல்லூரி மாணவரான ஸ்ரீதரன் துவாரகன் பௌதீக விஞ்ஞான பிரிவில்முதலிடம் பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

புலோலி, புற்றளை, உபயகதிர்காமத்தைச் சேர்ந்த குறித்த மாணவன் யாழ். வடமராட்சி வலய கணணி வள முகாமையாளர் சிறிதரனின் மகன் என்பதும் குறிப்பிடத்தக்கது.


கடும் பனிமூட்டம் எதிரொலி :  3,119 ரயில்கள் தாமதமாக இயக்கம்

கடந்த நவம்பர் முதல் தற்போது வரை நாடு முழுவதும் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனிடையே வட மாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக நவம்பர் 1 முதல் மற்றும் டிசம்பர் 21 வரையிலான காலக்கட்டத்தில் 3000-க்கும் மேற்பட்ட ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.


டெல்லி மேல்–சபை முடக்கம் முடிவுக்கு வந்தது

குஜராத் சட்டசபை தேர்தலின் போது முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கை பாகிஸ்தானுடன் தொடர்புபடுத்தி பிரதமர் மோடி பேசியதற்கு காங்கிரஸ் கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்தது. இந்த விவகாரம் பாராளுமன்றத்திலும் எதிரொலித்தது.

மன்மோகன் சிங் குறித்து பேசியதற்காக பிரதமர் வருத்தம் தெரிவிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் வற்புறுத்தியதால், டெல்லி மேல்–சபையில் ஒரு வாரமாக சபை நடவடிக்கைகள் முடங்கின.


ஆடம்பர கார்களுக்கு ஜி.எஸ்.டி. வரி உயர்வு

மந்திரி அனந்தகுமார் ஹெக்டேவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் மேற்கொண்ட கடும் அமளிக்கு மத்தியில் பேசிய ஜெட்லி கூறுகையில், மேற்படி கார்களுக்கு வசூலிக்கப்படும் ஜி.எஸ்.டி. வரி மூலம் கிடைக்கப்பெறும் தொகையானது, ஜி.எஸ்.டி.யால் ஏற்படும் வருவாய் இழப்புகளை சமாளிக்க மாநிலங்களுக்கு இழப்பீடாக வழங்கப்படும் என தெரிவித்தார். இதன் மூலம் மாநிலங்களுக்கு இழப்பீடு உறுதி செய்யப்பட்டு உள்ளது என்றும் கூறினார். இதைத்தொடர்ந்து மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேறியது.


செல்வ மகள்’ சிறு சேமிப்பு திட்டங்களுக்கு வட்டி குறைப்பு

தேசிய சிறு சேமிப்பு திட்டம், பொது வைப்பு நிதி ஆகியவற்றுக்கான வட்டி, 0.2 சதவீதம் குறைக்கப்பட்டு, 7.6 சதவீதமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கிசான் விகாஸ் பத்திரத்துக்கான வட்டி விகிதமும் 0.2 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. பெண் குழந்தைகளுக்கான ‘செல்வ மகள்’ திட்டத்தின் வட்டி, 8.3 சதவீதத்தில் இருந்து 8.1 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.5 ஆண்டுகால டெபாசிட்டுக்கான வட்டி, 6.9 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், மூத்த குடிமக்களுக்கான 5 ஆண்டுகால சேமிப்பு திட்ட வட்டி 8.3 சதவீதமாகவும், சேமிப்பு கணக்குக்கான ஆண்டு வட்டி 4 சதவீதமாகவும் நீடிக்கிறது.


2018–19–ம் ஆண்டுக்கான ஐ.நா. பட்ஜெட்டில் 5 சதவீதம் குறைப்பு

பட்ஜெட் தொகை கடந்த 2016–17–ம் ஆண்டை விட 5 சதவீதம் அதாவது 286 மில்லியன் டாலர் (சுமார் ரூ.1,800 கோடி) குறைவாகும். ஐ.நா.வின் இந்த பட்ஜெட் குறைப்பு நடவடிக்கைக்கு தாங்களே காரணம் என அமெரிக்கா கூறியுள்ளது. இது தொடர்பாக ஐ.நா.வுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதரான இந்திய வம்சாவளியை சேர்ந்த நிக்கி ஹாலே கூறினார்.


Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker