சுவாமி கருத்து …அய்யோ… அய்யோ…அது பாஜக கருத்தில்லை …தமிழிசை மறுப்பு

Stop whining about Cauvery River, Subramanian Swamy tells Tamil Nadu

தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்கின்ற வாய்ப்பு இல்லை, தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வர் கேட்டு கொண்டால் இத்தாலியில் இருந்து கடல் நீரை குடிநீர் ஆக்கும் திட்டத்தை தமிழகத்திற்கு கொண்டு வர உதவுவதாக கருத்து தெரிவித்து இருந்த பாஜக நாடாளுமன்றம் உறுப்பினர் சுப்பிரமணியன் சுவாமி.

அடிக்கடி சர்ச்சைக்குறிய வகையில் கருத்துக்களை தெரிவித்து வரும் சுவாமி தற்பொழுது தமிழகத்தின் ஜீவாதார உரிமை பிரச்சனையான காவிரி விவகாரத்தில் மூக்கை நுழைத்து கருத்து தெரிவித்து இருப்பதால் தமிழகத்தில் பாஜகவிற்கு இருக்கும் கொஞ்சம் நெஞ்ச ஆதரவு கூட போய் விடும் போல உள்ளது என்று பாஜக அனுதாபிக்கள் முனுமுனுக்க துவங்கினார்கள்.

இதை அறிந்த பாஜக தமிழ் மாநில தலைவர் தமிழிசை அவர்கள் சுப்பிரமணியன் சுவாமி கருத்து பாஜகவின் கருத்தில்லை அது அவருடைய சொந்த கருத்து என்று தெரிவித்து இருக்கின்றார்.

சுப்பிரமணியன் சுவாமியின் கருத்தால் தமிழகத்தில் பாஜகவை நெட்டிசன் போட்டு தாக்குக்கின்றார்கள் சமூக வலைதளத்தில் இதனால் பாஜகவின் நிலை நாளுக்கு நாள் அதளப் பாதாளத்திற்கு செல்கின்றது.

 

Tags

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker