தென் ஆப்ரிக்கா அசத்தல் வெற்றி! சொதப்பிய இந்திய

தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான முதல் டெஸ்டில் இந்திய அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.
தென் ஆப்ரிக்கா சென்றுள்ள இந்திய அணி, முதலில் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. முதல் டெஸ்ட் போட்டி, கேப்டவுனில் நடக்கிறது. இதில் தென் ஆப்ரிக்க அணி, முதல் இன்னிங்சில் 286 ரன்கள் எடுத்தது. இந்திய அணி, 209 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

வேகப்பந்துவீச்சுக்குச் சாதகமான பிட்சில் 208 ரன்கள் இலக்காகக் கொண்டு களமிறங்கிய இந்திய அணி, தொடக்கம் முதலே திணறியது. காயத்தால் தென்னாப்பிரிக்காவின் ஸ்டெயின் பந்துவீச இயலாத நிலையில், மோர்னே மோர்கல், பிலாண்டர், ரபாடா கூட்டணி இந்திய பேட்ஸ்மேன்களுக்குக் கடும் நெருக்கடி கொடுத்தது. இந்த கூட்டணியின் வேகத்தை எதிர்கொள்ள முடியாத இந்திய பேட்ஸ்மேன்கள் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து வெளியேறினர். முதல் இன்னிங்ஸைப் போலவே டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் இந்தமுறையும் சொதப்பினர். இந்திய அணி 82 ரன்கள் சேர்ப்பதற்குள் 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. 8-வது விக்கெட்டுக்குக் கைகோத்த அஷ்வின் – புவனேஷ்வர் குமார் ஜோடி சிறிதுநேரம் தாக்குப்பிடித்தது. இந்த ஜோடி 8-வது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்தது. அஷ்வின், 37 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 42.4 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 135 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் தென்னாப்பிரிக்க அணி 72 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, 3 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. தென்னாப்பிரிக்க அணி தரப்பில் வேகப்பந்துவீச்சாளர் பிலாண்டர் 6 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

Tags

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker