Short News 60 Second Now | 12/01/2018

 

நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் சசிகலாவின் மனு மீது இன்று விசாரணை: 2-வது முறையாக ஷீலா பாலகிருஷ்ணன் ஆஜராகி விளக்கம்

 • நீதிபதி ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்திலிருந்து கடந்த மாதம் 21-ம் தேதி சசிகலாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. அதை அவர் 23-ம் தேதி பெற்றுக்கொண்டார். அந்த சம்மனில் குறிப்பிட்டிருந்த விவரத்தின் அடிப்படையில், வழக்கறிஞர் மூலமாக விசாரணை ஆணையத்தில் நான் பங்கேற்கிறேன் என்று கடந்த ஜனவரி 5-ம் தேதி சசிகலா மனு தாக்கல் செய்திருந்தார்.
 • அதன் மீதான நிலைப்பாடு என்ன என்பதை தெரிந்து கொள்வதற்காக நேரில் வந்திருந்தோம். அந்த மனு குறித்து நாளை (இன்று) விசாரிப்பதாக நீதிபதி ஆறுமுகசாமி தெரிவித்திருந்தார். அதனால் நாங்கள் நாளை (இன்று) ஆஜராகி, ஏற்கெனவே தாக்கல் செய்த மனு தொடர்பாக வாதிட இருக்கிறோம்.

3 அடிப்படை சுகாதார பழக்கங்களை கடைபிடித்து தூய்மையாக இருந்தால் நோய்களிலிருந்து தப்பலாம்: விழிப்புணர்வு ஏற்படுத்துகிறது இந்துஸ்தான் யூனிலீவர்

 • இந்தியாவில் மூன்றில் ஒரு பங்கு சிறார்கள் அடிக்கடி உடல் நலம் பாதிக்கப்படுகின்றனர். கைகளை சோப்பு போட்டு கழுவுவது, தூய்மையான தண்ணீரை பருகுவது, சுத்தமான கழிப்பறையை பயன்படுத்துவது போன்ற அடிப்படையான சுகா தார பழக்கங்களை கடைபிடிப்பதன் மூலம் இதனை தவிர்க்க முடியும்.
 • உலக சராசரி அளவை விட அதிகமாக இந்தியாவில் 38 சதவீதம் பேர் வளர்ச்சி குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இத்தகைய பிள்ளைகள் சுறுசுறுப்பு இல்லாமலும், அறிவாற்றல் குறைந்தும் காணப்படுகின்றனர்.

எழுத்தாளர் மாலனுக்கு ‘பாரதிய பாஷா’ விருது

 • நாட்டின் பெருமைக்குரிய இலக்கிய விருதுகளில் ஒன்றாக மதிக்கப்படும் ‘பாரதிய பாஷா’ விருது, தமிழ் எழுத்தாளர் மாலனுக்கு நிகழாண்டு வழங்கப்படவுள்ளது.
 • கடந்த ஆண்டுகளில், அசோகமித்ரன், ஜெயகாந்தன், சாண்டில்யன், இந்திரா பார்த்தசாரதி, சிவசங்கரி, சி.ஆர்.ரவீந்தரன், லக்ஷ்மி, பிரபஞ்சன், வைரமுத்து, பா. ராகவன் உள்ளிட்டோருக்கு இவ்விருது அளிக்கப்பட்டுள்ளது.
 • சாகித்ய அகாதெமி ஆலோசனைக் குழுவில் அங்கம் வகித்த இவர், ‘சரஸ்வதி சம்மான்’ விருது வழங்கும் கே.கே. பிர்லா பவுண்டேஷனில் தமிழ் மொழிக் குழுவின் தலைவர் ஆவார். பல அயலகப் பல்கலைக் கழகங்களில் உரையாற்ற அழைக்கப்பட்டவர்.
 • கடந்த ஆண்டு சிங்கப்பூர் நூலக வாரியம் அளிக்கும் ‘லீ காங் சியான் ஆய்வுக் கொடை’ வழங்கப்பட்டு சிங்கப்பூரில் 6 மாத காலம் தங்கியிருந்து இலக்கிய ஆய்வு மேற்கொண்டவர். இந்த கொடை அளிக்கப்பட்ட முதல் இந்தியரும், தமிழரும் இவரே.

முல்லைப் பெரியாறு: உச்ச நீதிமன்றம் புதிய உத்தரவு

 • முல்லைப் பெரியாறு அணை அமைந்துள்ள பகுதியில் கணிக்க முடியாத பேரிடர் ஏற்படும்பட்சத்தில் அதை பிரத்யேகமாக கையாளுவதற்கான வழிமுறைகளை உருவாக்குவதற்கான ஆய்வை மேற்கொள்ள மத்திய அரசும், தமிழகம், கேரளம் அரசுகளும் தனித் தனியாக குழுக்களை ஏற்படுத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இன்ஃபோசிஸ் நாராயண மூர்த்தியின் மருமகன் பிரிட்டன் அமைச்சரானார்

 • பிரிட்டனில், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகன் உள்பட இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இருவர் பிரிட்டன் அமைச்சரவையில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ளனர். இதையடுத்து, பிரிட்டன் அரசில் பங்கேற்றுள்ள இந்திய வம்சாவளி அமைச்சர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளது.
 • பிரிட்டனில் பிரதமர் தெரஸா மே தலைமையிலான கன்சர்வேட்டிவ் கட்சி ஆட்சியில் உள்ளது. தெரஸா மே, தனது அமைச்சரவையை மாற்றி அமைத்தார். இதில், இன்ஃபோசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மருமகனும், கன்சர்வேட்டிவ் கட்சியின் யாங்ஷயர் தொகுதி எம்.பி.யுமான ரிஷி சுனக் (37) புதிய அமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

31 செயற்கைக் கோள்களுடன் இன்று விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி-சி40

 • கார்ட்டோசாட்-2 உட்பட 31 செயற்கைக் கோள்களுடன் பிஎஸ்எல்வி-சி40 ராக்கெட் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து விண்ணில் செலுத்தப்படுகிறது. இதற்கான கவுன்ட்-டவுன் தொடங்கியது.
 • நாட்டின் தகவல் தொடர்பு வசதியை மேம்படுத்துதல், பூமியில் உள்ள இயற்கை வளங்களை ஆராய்தல், விண்வெளி ஆராய்ச்சி உள்ளிட்ட பணிகளுக்காக இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பல்வேறு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. உள்நாட்டு செயற்கைக் கோள்கள் மட்டுமின்றி, வணிகரீதியாக வெளிநாட்டு செயற்கைக் கோள்களும் விண்ணில் ஏவப்படுகின்றன.

ஜனாதிபதி ராம் நாத் கோவிந்த் 4 வது சர்வதேச தர்மம் மாநாடு துவங்கினார்

 • ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பீகாரில் ராஜ்கிரில் மூன்று நாள் சர்வதேச தர்மம் மாநாடு ஒன்றை திறந்து வைத்தார்.
 • தொடக்க அமர்வுக்கு தலைமை தாங்கினார் கோவிந்த். இந்த மாநாட்டில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரபன கலந்துகொண்டார்.
 • பீகார் கவர்னர் சத்யா பால் மாலிக், முதலமைச்சர் நிதீஷ் குமார்.

2018 ம் ஆண்டு குளிர்கால ஒலிம்பிக்கிற்காக ‘ஷெஃப் டி மிஷன்’ என்று ஐ.ஆர்.ஏ.

 • 2018 பிப்ரவரியில் தென் கொரியாவில் பியோங்ஹாங்கில் நடைபெறவிருக்கும் 23 வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளுக்கான செஃப் டி மிஷன் என இந்திய ஒலிம்பிக் அசோசியேஷன் (ஐஓஏ) ஹர்ஜிந்தர் சிங்கை நியமித்தது.
 • ஹர்ஜிந்தர் சிங் தற்போது ஐஸ் ஹாக்கி அசோஸியேஷனில் பொது செயலாளராக உள்ளார்.
 • IOA தலைவர் நரிந்தர் துருவ் பாத்ரா.

இந்திய-தொழில் வர்த்தகர் சன்னி வர்கீஸ் WBCSD தலைவர் நியமிக்கப்பட்டார்

 • ஜெனீவாவை தளமாகக் கொண்ட உலக வர்த்தக கவுன்சில் (WBCSD) தலைவர் சிங்கப்பூரில் உள்ள இந்தியத் தொழிலதிபர் சன்னி வர்கீஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
 • அவர் பால் போலமன் வெற்றி பெற்றார். வர்கீஸ், இணை நிறுவனர் மற்றும் சிங்கப்பூர் விவசாய வர்த்தக குழு ஓலம் இன்டர்நேஷனல் லிமிடெட் தலைமை நிர்வாக அதிகாரி, விவசாய துறை முதல் WBCSD தலைவர் ஆவார்.
 • WBCSD தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் ஜனாதிபதி பீட்டர் பேக்கர்.

அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெற ‘கிரீன் கார்டு’ ஒதுக்கீடு 45 சதவீதம் உயர்கிறது

 • அமெரிக்காவில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு வழங்கப்படுவது கிரீன் கார்டு. இந்த கிரீன் கார்டு பெறுவதற்கு உலகமெங்கும் உள்ள தகவல் தொழில் நுட்பத்துறையினர், டாக்டர்கள், வக்கீல்கள், தொழில் நுட்ப வல்லுனர்கள் போட்டி போடுகின்றனர். இந்த நிலையில் தகுதியின் அடிப்படையில் குடியேற்ற உரிமை வழங்கவும், வருடாந்திர கிரீன் கார்டு ஒதுக்கீட்டை 45 சதவீத அளவுக்கு அதிகரிக்கவும் அமெரிக்க நாடாளுமன்றத்தின் மக்கள் பிரதிநிதித்துவ சபையில் மசோதா அறிமுகம் செய்யப்பட்டது.

வரலாற்றில் முதன் முறையாக செய்தியாளர்களை சந்தித்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள்

 • வரலாற்றில் முதன் முறையாக செய்தியாளர்களை சந்தித்தனர் உச்சநீதிமன்ற நீதிபதிகள். நீதிபதி ஜெ.செல்லமேஸ்வரர் உள்ளிட்ட 4 உச்சநீதிமன்ற நீதிபதிகள் தற்போது செய்தியாளர்களை சந்தித்து உரையாற்றி வருகின்றனர்.

வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாகப்போகும் பெண்!

 • இந்திய நீதித்துறையில் முதன்முறையாக வழக்கறிஞராக இருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவியேற்கப்போகிறார் இந்து மல்கோத்ரா என்ற பெண்.
 • 1950-ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உருவானது. 68 ஆண்டு கால வரலாற்றில் உச்ச நீதிமன்றத்தில் இந்து மல்கோத்ராவையும் சேர்த்து 7 பெண்கள்தான் நீதிபதியாகியுள்ளனர். 1989- ம் ஆண்டு முதன்முறையாக பாத்திமா பீவி உச்ச நீதிமன்ற நீதிபதி ஆனார். தற்போது, உச்ச நீதிமன்றத்தில் உள்ள 25 நீதிபதிகளில் பானுமதி மட்டுமே ஒரே பெண் நீதிபதி.

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker