Short News 60 Second Now | 06/01/2018

போக்குவரத்துக் கழக ஊழியர்களின் வேலைநிறுத்த எதிரொலி: தமிழகம் முழுவதும் குறைந்த அளவில் பேருந்துகள் இயக்கம்


நடப்பு நிதி ஆண்டில் தனிநபர் வருமான வளர்ச்சி 8.3% குறையும்: மத்திய புள்ளியியல் அலுவலகம் கணிப்பு


பேரவை நடைபெறும் அனைத்து நாட்களிலும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்க வேண்டும்: கொறடா அதிரடி உத்தரவு


போக்குவரத்து துறை நஷ்டத்திற்கு திமுக, அதிமுக ஆட்சியாளர்களே காரணம்: அன்புமணி ராமதாஸ் குற்றச்சாட்டு

 • “போக்குவரத்து தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைகளை தமிழக அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும். இரண்டு நாட்களாக 22000 பேருந்துகள் இயங்கவில்லை. போக்குவரத்து ஊழியர் சங்கங்கள் ஒன்று சேர்ந்து போராடி வருகின்றனர்.
 • 22 முறை பேச்சு வார்த்தை நடந்துள்ளது. அரசு ஊழியர்களுக்கு 7 வது ஊதியக்குழு ஒப்பந்தப்படி ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் போக்குவரத்து துறை பொதுத்துறை இவர்களது கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற தவறி இருக்கிறது. அரசு ஊழியர்களுக்கு 2.57 உயர்வு அளிக்கப்பட்டுள்ளது, ஆனால் போக்குவரத்து தொழிலாளர்களுக்கு 2.42 மட்டுமே அளிப்பதாக அரசு தரப்பு தெரிவிக்கின்றனர்.

விமானங்களில் அவசரத் தேவைக்கு உணவு அளிக்க மறுப்பதா?: எம்.பி.க்கள் குழு கேள்வி

போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வாருங்கள்: முதல்வர் பழனிசாமியிடம் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்

 • “திமுகவின் செயல் தலைவரும், தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் இன்று (06-01-2017) முற்பகல் 11 மணிக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தமிழ்நாடு அரசு போக்குவரத்துத் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தை உடனே பேச்சுவார்த்தை மூலம் முடிவுக்குக் கொண்டு வந்து, தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியை நீக்கி, தமிழக மக்களின் போக்குவரத்துப் பிரச்சினையைப் போக்குமாறு கேட்டுக் கொண்டார்.
 • மேலும், போக்குவரத்துத் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு வழங்காமல் உள்ள நிலுவைத்தொகை உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை உடனே நிறைவேற்றித் தருமாறு வலியுறுத்தினார். அனைத்தையும் கேட்டுக்கொண்ட முதல்வர், தொழிலாளர் பிரச்னையையும், பொதுமக்களின் நெருக்கடியையும் தீர்க்க, அரசு உடனடியாக என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என்பது தொடர்பான விபரம் எதையும் வெளியிடவில்லை.”

நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் நடவடிக்கை: அமைச்சர் விஜயபாஸ்கர் எச்சரிக்கை

 • கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கர், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள போக்குவரத்து ஊழியர்கள் நாளைக்குள் பணிக்கு திரும்பாவிட்டால் துறை ரீதியான கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழகம் முழுவதும் 80 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. நாளை 100 சதவீத பேருந்துகள் இயக்கப்படும் என்றார்.
 • மேலும், போக்குவரத்து துறையில் ஆட்கள் தேர்வு செய்யும் போது, தற்காலிகமாக நியமிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தொழிற்சங்கத்தினருடன் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து முதல்வர் முடிவு செய்வார். அவர்களுடன் 23 முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விட்டது என அமைச்சர் விஜயபாஸ்கர் கூறினார்.

இது ஒரு மிகப்பெரிய சந்திப்பு: ரஜினியுடன் சந்திப்பு குறித்து அந்நாட்டு பிரதமர் ட்வீட்

 • மலேசியாவில் தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் நட்சத்திர கலை விழா இரண்டு நாட்கள் நடைபெறகிறது. நேற்று மலேசியா சென்றடைந்த நடிகர் ரஜினியை ரசிகர்கள் வரவேற்றனர்.
 • அதனையடுத்து அந்நாட்டு பிரதமர் நஜிப் ரசாக்கை சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு குறித்து அந்நாட்டு பிரதமர் நஜிப் ரசாக் ‘இது ஒரு மிகப்பெரிய சந்திப்பு என தனது ட்விட்டரில் கூறியுள்ளார். கடந்த ஆண்டு மார்ச் மாதம் தமிழகம் வந்த நஜிப் ரசாக் நடிகர் ரஜினியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியது குறிப்பிடத்தக்கது.

பாகிஸ்தான் அரசிடமிருந்து பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய சில இயக்கங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி நிறுத்தம்: பதாகைகளை ஏந்தி போராட்டம்

 • பாகிஸ்தான்: பாகிஸ்தான் அரசிடமிருந்து பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய சில இயக்கங்களுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி நிறுத்தப்பட்டதற்கு எதிராக லாகூரில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. கோடிக்கணக்கான ரூபாய் நிதியை பெற்றுக் கொண்டு பாகிஸ்தான் பொய் கூறி வருவதாக அமெரிக்க அதிபர் டொணால்டு டிரம்ப் கூறியுள்ளார். இதனையடுத்து ஹபீஸ் சையத்தின் ஜமாத் உத் தவா இயக்கம் உள்பட 2 அமைப்புகளுக்கு நன்கொடை வழங்க பாகிஸ்தான் அரசு தடை விதித்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்க அதிபர் டிரம்ப்க்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்தப் போராட்டத்தின் போது அமெரிக்காவுக்கு ஆதரவாக செயல்படுபவர்கள் துரோகிகள் என்ற பதாகைகளை ஏந்தியும் போராட்டக்காரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

உள்நோக்கத்துடன் பேசும் கமல்ஹாசனுக்கு பதில் சொல்ல முடியாது: அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி

 • அரசு எந்திரத்தில் தேவை இருக்கும், முழுமையாக நிறைவேற்றி தருவது அரசாங்கத்தின் கடமை, அந்த தேவைகளை நிதி நெருக்கடி இருந்தாலும் நிறைவேற்றி வருகிறோம். உதாரணத்திற்கு ஸ்கூட்டர் பொங்கல் அன்று நிறைவேற்றப்பட உள்ளது. திமுக ஆட்சியில் தொழிலாளர் நலன் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டது. ஜெயலலிதா ஆட்சியில் தொழிலாளர் நலன் காக்கப்படுகிறது.
 • திமுக ஆட்சியில் தொழிலாளர் நலன் எப்படி இருந்தது என்பதற்கு உதாரணம் மாஞ்சோலை தேயிலை தோட்டத்தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட அடக்குமுறையே உதாரணம். அவர்கள் தங்கள் கூலிக்காக போராடியபோது அடக்குமுறையை ஏவி விட்டு, அன்று தாமிரபரணி ஆறே ரத்த ஆறாக மாறியது.
 • எனவே கமல்ஹாசன் அவருக்கு தெரிந்தது எல்லாம் பொத்தாம் பொதுவாக சொல்வது, குறிப்பாக அதிமுகவை குறிவைத்து சொல்வதை பார்க்கும் போது உள்நோக்கத்தோடு கருத்து சொல்வதாக தெரிகிறது. ஆகவே அதற்கு கருத்து சொல்ல விரும்பவில்லை.

வடகிழக்கு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார் பாஜக தேசிய தலைவர் அமித்ஷா

 • மேகாலயா,திரிபுரா, நாகாலாந்து உள்ளிட்ட சில மாநிலங்களுக்கான சட்டசபைதேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷா அந்த மாநிலங்களுக்கு சுற்றுபயணம் மேற்கொள்ள உள்ளார். நடந்து முடிந்த குஜராத் சட்டசபைக்கான தேர்தலில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியை கைப்பற்றியது.
 • இதனையடுத்து வடமாநிலங்களில் பெரும்பான்மையனவற்றில் பா.ஜ.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் ஆட்சி செய்து வருகின்றன. கடந்த சில தினங்களுக்கு முன்னர் மேகாலயா மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த 5 எம்.எல்.ஏக்கள் உட்பட 8 எம்.எல்.ஏக்கள் பதவி விலகியது குறிப்பிடத்தக்கது.

ஒன்றுக்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணியாற்றிய 80 ஆயிரம் பேராசிரியர்களை கண்டுபிடித்தது எப்படி.?  காட்டிக்கொடுத்தது யார்..?

 • “சிலர் முறைகேடு செய்து, பல கல்லூரிகளில் முழு நேர பேராசிரியராக பணியாற்றினர். ஆதார் கட்டாயமாக்கப்பட்டதன் மூலம், இதுபோன்று பணியாற்றி வந்த சுமார் 80 ஆயிரம் பேராசிரியர்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மத்திய பல்கலைக்கழக பேராசிரியர்கள் யாரும் இல்லை. ஆனால் சில மாநில பல்கலைக்கழகங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் பணியாற்றி வருகின்றனர். சில பேராசிரியர்கள் ஆசிரியர்களாக வெளிப்படையாக பணியாற்றி வருகின்றனர். முறைகேடாக பணியாற்றி வரும் அவர்கள் மீது விரைவில் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் ஜவடேகர்.

அகில இந்திய ரஜினி ரசிகர் மன்றம் மக்கள் மன்றமாக பெயர் மாற்றினார் ரஜினிகாந்த்

 • சென்னை : புது கட்சி தொடங்கி, சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப் போவதாக அறிவித்துள்ள ரஜினிகாந்த் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார். தமிழக சட்டப் பேரவைத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்களை நிறுத்தப் போவதாகக் கூறியுள்ளார்.
 • ஆன்மிக அரசியல் செய்யப் போவதாக அவர் அறிவித்திருந்தாலும், திராவிட இயக்கத் தலைவர்களைச் சந்தித்து வாழ்த்துப் பெற்று வருகிறார்.
 • இந்நிலையில், அகில இந்திய ரஜினிகாந்த் ரசிகர் மன்றத்தின் பெயர் ரஜினி மக்கள் மன்றம் என மாற்றப்பட்டுள்ளது. அரசியல் கட்சிக்கான வேலைகள் நடந்து வரும் நிலையில், இணையதளத்தில் பெயரை ரஜினி மாற்றியுள்ளார்.

நீதிபதிகளுக்கு தொழிலாளர்களின் கேள்வி!

 • ஊதிய உயர்வு மற்றும் தங்களுக்கான ஓய்வூதியத்தொகையை பிடித்து வைத்திருப்பதை தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு போக்குவரத்து தொழிலாளர்கள் மூன்று நாட்களாக வேலை நிறுத்தம் செய்து வருகிறார்கள்.
 • இந்த நிலையில் சென்னை உயர்நீதிமன்றம், “சம்பளம் போதவில்லை என்றால் வேலையைவிட்டுப் போகவேண்டியதுதானே” என்று கேள்வி எழுப்பியது.
 • இது தொழிலாளர்களிடையே பலத்த கண்டனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில் திருநெல்வேலி அரசு போக்குவரத்து நிலையத்தில், சி.ஐ.டி.யு. தொழிலாளர்கள், தங்களது அறிவிப்பு பலகையில் எழுதி வைத்திருக்கும் ஒரு தகவல் அனைவரையும் ஈர்த்துள்ளது.
 • இதை சமூகவலைதளங்களில் பலரும் பகிர்ந்து வருகிறார்கள்.

கடந்த ஆண்டு 995.89 கோடி ரூபாயை காணிக்கையாக வசூலித்துள்ள கோவில் எது தெரியுமா?

 • உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு ஏழுமலையான தரிசிக்க இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். ஒவ்வொரு நாளும் லட்சக்கணக்கானோர் கோவிலுக்கு வருகை தந்து சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
 • உலக பணக்கார சாமிகளில் முதன்மையாக இருந்து வருபவர் திருப்பதி வெங்கடேசன். இந்த கோவிலுக்கு வரும் பக்தர்கள் பல வழிகளில் தங்களால் இயன்ற அளவு காணிக்கை செலுத்தி வருகிறார்கள்.
 • இங்கு பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும் லட்டு விற்பனை மூலமும், பக்தர்கள் காணிக்கையாக செலுத்தும் தலைமுடி காரணமாக பல கோடிகள் வருமானம் கிடைத்து வருகிறது. மேலும் பக்தர்கள் ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு உண்டியலில் காணிக்கை போடுகிறார்கள்.

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker