Short News 60 Second Now | 03/01/2018

கால்நடை ஊழல் வழக்கில் பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் உள்ளிட்ட 15பேர்களுக்கு இன்று தண்டனை அறிக்கப்பட இருக்கின்றது.


அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம்: அமைச்சர்கள் உள்பட 7 பேர் கலந்துகொள்ளவில்லை


அமெரிக்க அதிபர் டிரம்ப் கருத்து மிகுந்த ஏமாற்றமும் வருத்தமும் அளிக்கின்றது பாகிஸ்தான் அரசு


பொன்னையன், பா.வளர்மதி, கோகுல இந்திரா, வைகைச்செல்வன், ஜே.சி.டி.பிரபாகர், கோ.சமரசம், அழகுராஜ், கோவை செல்வராஜ், தீரன், கே.சி.பழனிச்சாமி, மகேஸ்வரி, பாபு முருகவேல் ஆகியோர் அதிமுக அதிகாரப்பூர்வ செய்தி தொடர்பாளர்களாக நியமனம்.


ஐ.நா.வில் இந்தியை ஆட்சி மொழியாக்க மத்திய அரசு முயற்சி! சசிதரூர் குற்றச்சாட்டு

 • பாராளுமன்றத்தில் இந்தியாவில் உள்ள ஆட்சி மொழிகள் குறித்து விவாதம் நடைபெற்றது.
  இதில் பேசிய முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான சசிதரூர் பேசும்போது, மத்திய அரசை கடுமையாக விமர்சித்தார்.
 • இந்தியை மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக மாற்ற மோடி அரசு விரும்புகிறது என்ற சசிதரூர், மோடி அரசு  ஐ.நா.சபையிலும்  இந்தியை ஆட்சி மொழியாக்க  முயற்சிக்கிறது என்று என்று கடுமையாக குற்றம் சாட்டினார்.
 • மேலும், நாட்டில் இந்தி மொழி தேசிய மொழி கிடையாது  என்றவர் இந்தி மொழியை திணிப்பதற்கு கண்டனமும் தெரிவித்தார்.

அதிமுகவுக்கு தனி டிவி, நாளிதழ்…. முதல்வர் அறிவிப்பு!

 • அதிமுக சார்பில் தொடங்கப்படவுள்ள நாளிதழுக்கு ‘நமது அம்மா’ என பெயரிடப்படவுள்ளது. தொலைக்காட்சிக்கு ‘அம்மா டிவி’ என்று பெயர் வைக்கப்படலாம் என அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.
 • அதற்கான பணிகள் நடைபெற்று வருதாகவும் விரைவில் டிவி சேனல் மற்றும் பத்திரிகை தொடங்க்ப்படும் என்றும் முதல்வர் கூறி உள்ளார்.
  நமது அம்மா பத்திரிகைக்கு ஏற்கனவே நமது எம்ஜிஆரில் ஆசிரியராக பதவி வகித்து வந்த மருது அழகுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழக அரசியலில் மாற்றமா?: டிடிவி தினகரன் பதில்

 • ஆய்வு செய்வதால் ஆளுநர் ஆட்சி என்று சொல்லக்கூடாது. பாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சி சரியாக நடப்பதால் ஆளுநர் ஆய்வு செய்வதில்லை. விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை மாநில அரசு முறையாக பயன்படுத்தவில்லை.
 • ஆர்.கே.நகர் தேர்தல் விதிமுறைப்படி இல்லாமல் நிதிமுறைப்படி நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்றதிலிருந்தே மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் ஆளுநரின் ஆய்வை எதிர்ப்பது நியாயமல்ல: தமிழிசை சௌந்தரராஜன்

 • ஆய்வு செய்வதால் ஆளுநர் ஆட்சி என்று சொல்லக்கூடாது. பாஜக ஆளும் மாநிலங்களில் ஆட்சி சரியாக நடப்பதால் ஆளுநர் ஆய்வு செய்வதில்லை. விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கிய நிதியை மாநில அரசு முறையாக பயன்படுத்தவில்லை.
 • ஆர்.கே.நகர் தேர்தல் விதிமுறைப்படி இல்லாமல் நிதிமுறைப்படி நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். தமிழக ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் பொறுப்பேற்றதிலிருந்தே மாநிலத்தின் பல பகுதிகளிலும் ஆய்வு மேற்கொண்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  டி.டி.வி.தினகரன் சட்டப்பேரவையில் அரசை விமர்சித்தால் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் குறுக்கிட வேண்டாம் என  முதல்வர் உத்தரவு பிறப்பித்துள்ளார்

தமிழக சட்டப்பேரவை கூட்டம், வரும், 8-ம் தேதி தொடங்குகிறது. ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் சட்டப்பேரவையில் உரையாற்றுகிறார். கூட்டத்தில், சுயேச்சையாக வெற்றி பெற்ற தினகரனும், பங்கேற்க உள்ளார். ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.,க்களை தங்கள் வசம் இழுத்து, ஆட்சியை கவிழ்க்க, தினகரனும் முயற்சித்து வருகிறார். இவற்றை முறியடிக்கவும் சட்டப்பேரவை கூட்டத்தை எவ்வாறு எதிர்கொள்வது என்பதை தீர்மானிக்கவும், அ.தி.மு.க. எம்.எல்.ஏ.,க்கள் கூட்டம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.


ஜெ. மரணம்: விசாரணை ஆணையத்தின் முன் மருத்துவர் சுதா சேஷய்யன் ஆஜர்

 • ஜெயலலிதாவின் உடலை எம்பால்மிங் செய்த சென்னை மருத்துவ கல்லூரி துணைத்தலைவர் பேராசிரியர் டாக்டர் சுதா சேஷய்யன் ஜனவரி 3-ம் தேதி ஆஜராகும்படி உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, டாக்டரி சுதா சேஷய்யன், எழிலகத்தில் உள்ள விசாரணை ஆணையத்தில் இன்று காலை ஆஜராகி விளக்கம் அளித்தார்.
 • அப்பல்லோ டாக்டர் சத்யபாமா நாளை (ஜனவரி 4-ந் தேதி) ஆஜராகும்படி சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

அருணாசல பிரதேசத்துக்குள் சீனப் படைகள் ஊடுருவல் – எல்லையில் பதற்றம் நீடிப்பு

 • சீனப் படைகள் அந்த கிராமத்தை சீனாவின் பிற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் ரோடு போடும் எந்திரங்களுடன் வந்திருப்பது தெரிந்தது. சாலை அமைக்க பாதையை அகலப்படுத்த 2 பெரிய புல்டோசர்களையும் சீனப் படைகள் கொண்டு வந்திருந்தன.
 • இதற்கு இந்திய அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். சீனப்படை வீரர்களிடம் திரும்பி செல்லுமாறு கூறினார்கள். ஆனால் அதை ஏற்க சீனப்படைகள் மறுத்துவிட்டன.
 • இதைத் தொடர்ந்து பைசிங் கிராமத்தில் இந்திய ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதியில் கடும் பதற்றம் ஏற்பட்டுள்ளது. சீனா கொண்டு வந்த சாலை போடும் எந்திரங்களையும், புல்டோசர்களையும் இந்திய அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.

பாலஸ்தீனுக்கான நிதியை நிறுத்த போவதாக டொனால்டு டிரம்ப் மிரட்டல்

 • எந்த பலனும் இல்லாமல் மில்லியன் கணக்கில் டாலர்கள் செலவளித்தது பாகிஸ்தானுக்கு மட்டுமல்ல, நிறைய நாடுகளுக்கும் தான். உதாரணமாக பாலஸ்தீனுக்கு ஆண்டுக்கு நூற்றுக்கணக்கான மில்லியன் டாலர்கள் நிதி அளித்தும் ஒரு மரியாதையும் கிடைக்கவில்லை. இஸ்ரேலுடன் நீண்ட காலமாக உள்ள பிரச்சனையை பேசித் தீர்க்கவும் அவர்கள் தயாராக இல்லை.
 •  ஜெருசலேம் விவகாரத்தை எடுத்துக்கொண்டால் பேச்சுவார்த்தையிலேயே மிக கடினமான பகுதி அது. ஆனால், இஸ்ரேல் தனது பங்கினை செலுத்த தயாராக உள்ளது. பாலஸ்தீன் அமைதியான பேச்சுவார்த்தைக்கே விருப்பம் இல்லாமல் இருக்கிறது. நாம் ஏன் அவர்களின் பெரிய எதிர்காலத்திற்கு பணம் செலுத்த வேண்டும்? இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

மத்திய அரசு ஊழியர்கள் ரத்த தானம் அளித்தால் சம்பளத்துடன் கூடிய விடுமுறை

 • ரத்த தானம் அல்லது ரத்த கூறுகள் (சிவப்பு அணுக்கள், பிளாஸ்மா, தட்டணுக்கள்) தானம் அளிப்பதற்கு சிறப்பு தற்செயல் விடுப்பை அளிக்க மத்திய பணியாளர் நல அமைச்சகம் முடிவு செய்து இருக்கிறது.
 •  அதன்படி அங்கீகரிக்கப்பட்ட ரத்த வங்கிகளில் ரத்த தானம் அல்லது ரத்தக் கூறுகளை தானம் அளிக்கும் நாளன்று (ஒருநாள் மட்டும்) ஊழியர்கள் சம்பளத்துடன் கூடிய விடுமுறையாக எடுத்துக்கொள்ளலாம். ஆண்டுக்கு அதிகபட்சமாக இதுபோல் 4 நாட்கள் விடுமுறை எடுத்துக்கொள்ள இயலும். இதற்கு தானம் அளித்ததற்கான தகுந்த ஆதாரங்களை இணைப்பது அவசியம்’’.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

புனே வன்முறை : மும்பையில் இன்று முழு அடைப்புக்கு அழைப்பு

மகாராஷ்டிராவில் இன்று முழு அடைப்பு போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து, பாரிபா பகுஜன் மகா சங்கத் தலைவரும், சட்டமேதை அம்பேத்கரின் பேரனுமான, பிரகாஷ் அம்பேத்கர் கூறுகையில், “ இந்த வன்முறை சம்பவங்கள், தலித் மக்களுக்கும், மராத்தா மக்களுக்கும் இடையேயான மோதல் இல்லை. வன்முறை ஏற்படாமல் தடுக்க, மாநில அரசு தவறிவிட்டது. வன்முறையைக் கண்டித்து, இன்று மராட்டியம் முழுவதும் முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும். முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், நீதி விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதை ஏற்க முடியாது.உயர் நீதிமன்றத்தின் நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்றார். முழு அடைப்புக்கு விடுத்துள்ள நிலையில், மும்பை உட்பட மாநிலம் முழுவதும் தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.


பரபரப்பான அரசியல் சூழலில் இன்று அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்

தமிழக சட்டப்பேரவையின் 2018-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம், ஜனவரி 8-ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்குகிறது. இந்நிலையில், அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில்  இன்று (ஜன.3) காலை 10 மணியளவில்  நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் கே.பழனிசாமி ஆகியோர் தலைமையில் இந்தக் கூட்டம் நடக்க உள்ளது.


அரசியல் பணிகளில் தீவிரம்: கருணாநிதியை இன்று சந்திக்கிறார் ரஜினிகாந்த்

ரஜினிகாந்த், தான் அரசியலில் இறங்குவது உறுதி என அறிவித்து விட்டு, அதற்கான பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதியை சந்திப்பதாக வெளியாகியுள்ள தகவல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இருப்பினும் இது குறித்து இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியாகவில்லை


‘தமிழக அரசியலில் புரட்சி ஏற்படுத்த எனக்கு ஆசை’ ரஜினிகாந்த் பேச்சு

சினிமா துறையில் எனது முதல் நேர்முகத் தேர்வு ‘பொம்மை’ என்னும் நாடகத்திற்காக. அது 1976-ல் என்று நினைக்கிறேன். உண்மையிலேயே நான் ஒரு மீடியாவை பார்த்து நடுங்குபவன். இப்படி நிக்கணும், அப்படி நிக்கணும், இந்த கேள்வி கேட்கணும், அந்த கேள்வி கேட்கணும் என்று என்னை திணறடிச்சுடுவாங்க. பட விழாவுக்கு சென்றாலும் எனக்கு அங்கு பேசுவதில் பயம் இருந்தது.
1996-ம் ஆண்டு காலத்திலேயே அந்த மீடியா பயம் எனக்கு இருந்துச்சு. இப்போ அரசியல் அறிவிப்புக்கு பிறகும் எப்படி இதனை சமாளிப்பது என்று எனக்கு தெரியல. சொல்ல வேண்டியதை எல்லாம் கூட்டத்திலே சொல்லிடுறேன். அப்புறம் பேட்டியில என்ன சொல்றதுனு குழப்பமா இருக்கு. கேமராவ பாத்ததும் டக்குனு பேச முடியல.
இதுக்கெல்லாம் (அரசியல்) நான் புதுசு. உங்க ஒத்துழைப்பு இல்லாம நான் எதுவுமே செய்யமுடியாது. எனவே நான் அப்பப்போ ஏதாவது தப்பு செஞ்சிருந்தா தயவுசெஞ்சு மன்னிசுக்கோங்க.
எல்லோருக்கும் பொறுப்பு இருக்கு. எல்லாமே தமிழகத்தில் இருந்து தான் தொடங்குது. இங்கிருந்து தொடங்கி, அரசியலில் ஒரு புரட்சியை ஏற்படுத்துனும்னு எனக்கு ஆசை. அது இந்த தலைமுறையில் நடக்கனும்னு எல்லாரும் ஆசைப்படுறாங்க. எல்லாம் உங்க ஒத்துழைப்பு இல்லாம நடக்காது. உங்க தொடர்பு இருந்துகொண்டே இருக்கணும். ஒரு முறையான பத்திரிகையாளர் சந்திப்பு விரைவில் நடக்கும். அப்போது உங்களை சந்தித்து நிறைய பேசறேன்.

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker