விவசாயிகள் போராட்டம்……மராட்டியத்தில் பாயிந்து……ஒடிசாவில் பதுங்கிய எதிர்கட்சிகள்!………மவுனம் காத்த தேசிய ஊடகங்கள்……காரணம் இதோ!……

சமீபத்தில் மகாராஷ்டத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடைப்பெற்ற விவசாயிகள் போராட்டத்தை கம்யூனிஸ்ட் தொழிற்சங்கமான அனைத்து இந்தியா கிசான் சங்கம் முன்னேடுத்து நடத்தியது இதற்கு காங்கிரஸ், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களின் ஆதரவை கொடுத்தனர்.

மகாராஷ்ட சட்டமன்றத்தை முற்றுகையிட மும்பையை நோக்கி விவசாயிகள் நடைபயணமாக வந்தனர்.விவசாயிகள் அனைவரும் ஆசாத் மைதானில் திரண்டு போராட்டம் நடத்தினர்.அந்த கூட்டத்தில் சீதாராம் யெச்சூரி பேசினார். போராட்டத்தில் திரண்டு இருந்த அனைத்து விவசாயிகளும் கையில் சிவப்புக் கொடிகளை ஏந்தியிருந்தனர்

அதன்பின் விவசாய சங்கத்தின் பிரதிநிதிகள், சங்கத் தலைவர் அஜித் நாவலே, எம்எல்ஏக்கள் உள்ளிட்டோர் பாஜக முதல்வர் பட்நாவிஸை சந்தித்து பேச்சு நடத்தினர்.

விவசாயி பிரதிநிதிகளை அழைத்து ஆளும் மாநில பாஜக முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதால் விவசாயிகள் போராட்டம் கைவிடப்பட்டது.

ஒரிசா மாநிலத்திலும் 15000 மேற்பட்ட விவசாயிகள் கடந்த 14/3/2018தேதி கடன் தள்ளுபடி,ஏழை விவசாயிகளுக்கு ஒய்வூதியம்,நெல்லுக்கு தற்பொழுது உள்ள ஆதார விலையான ரூபாய் 1550 மாற்றி குண்டாலுக்கு குறைந்தது ரூபாய் 3000மாக உயர்ந்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி நவநிர்மான் க்ருஷாக் சங்கதன் (NKS) அமைப்பு முன் நின்று போராட்டம் நடத்தியது.

ஆனால் மாராட்டியத்தில் விவசாயிகள் போராட்டத்திற்கு கிடைத்த விளம்பரமோ ஆதரவோ ஒடிசாவில் போராடிய விவசாயிகளுக்கு கிடைக்கவில்லை என்பதை நிதர்சனமான உண்மையாகும்.

அதற்கு காரணம் ஒடிசாவை ஆளுவது பிஜு ஜனதா தளம் என்பதால் தான் இந்த விவசாயிகள் போராட்டத்தை பற்றி காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியோ அல்லது கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர்களோ அல்லது பாஜக விற்கு எதிராக என்றால் முதலில் குரல் கொடுக்கும் மேற்கு வங்க முதல்வர் மம்தாவோ வாயையே திறக்கவில்லை என்று NKS அமைப்பு குற்றம் சாட்டி உள்ளது.

இதுவே பாஜக ஆளும் மாநிலம் என்றால் உடனே எல்லா எதிர்கட்சிகளும் தேசிய ஊடகங்களும் வரிந்து கட்டி கொண்டு வருவார்கள் ஆனால் பாஜக அரசு அல்லாத மாநிலம் என்றால் நியாயமான போராட்டத்தை கூட யாரும் திரும்பி பார்க்க மாட்டார்கள் என்று ட்விட்டரில் பொங்கி இருங்கின்றார்கள் நெட்டிசன்கள்.

NKS ஒருங்கிணைப்பாளர் அக்ஷய குமார் குமரி முதல் காஷ்மீர் வரை விவசாயிகள் பிரச்சனைகள் எல்லாம் ஒன்று தான் அது மராட்டியத்தில் மட்டும் வேறுயில்லை என்றார்.

மேலும் ஒரிசாவில் எங்கள் போராட்டம் என்பது 36லட்சம் ஏழை விவசாயிகளுக்கானது என்றார்.

எங்கள் கோரிக்கைகளுக்கு செவி மடுக்காத ஆளும் பிஜு ஜனதா தளத்திற்கு எதிராக தீவிரமான போராட்டத்தை மக்களிடத்தில் முன்னேடுத்து செல்ல இருக்கின்றோம் என்று தெரிவித்தார்.

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker