செர்பிய இனபடுகொலை”

மதுமிதா தினேஷ்குமார்

பழிவாங்கல் ஒரு தொடர்நோய். இனபடுகொலைகளும் அவ்வாறே, தொடர்நிகழ்வுகள் பலவற்றையும் அதற்கான பழிவாங்கள் காரணிகளையும் தன் வரலாற்றில் காலங்காலமாக பதிந்துக்கொண்டேயிருக்கின்றது.

 

இனபடுக்கொலைகள் பலவற்றை இப்பூமி சகித்துக்கொண்டு சுழன்றுக்கொண்டிருக்கும் காரணம் அவற்றின் காரணிகள் காலபாடமாகும் என்பதாக இருப்பினும், நிதர்சனத்தில் அவை பாடமாக அல்லாமல் மற்றொறு அதர்மத்திற்கு பாதையாக அமைந்து விடுகிறது.

அதுபோன்றதொரு பாதைதடமே இந்த போஸ்னிய வரலாறு. 25 ஆண்டுகளுக்கு முன் போஸ்னியாவில் நிகழ்ந்த உள்நாட்டுப்போர் மற்றும் படுக்கொலைகள் பற்றி பலர் அறிந்திருக்க கூடும், ஆனால் 60 ஆண்டுகளுக்கு முன் உலகபோரின் போது நிகழ்த்தபட்ட இனபடுக்கொலை வரலாற்றை பரட்டிபோட்டது உண்மை. உண்மையை மறைக்க அரும்பாடுபட்டனர் வாடிகன் வாசிகள்.

1941-45 இரண்டாம் உலகயுத்தம் நிகழும் காலகட்டம். சுதந்திர குரோஷியாவில் உஸ்டேஸ் ராஜியத்தில் நடந்தேறிய இந்த இனபடுக்கொலைகளின் மதிப்பீட்டினை குறைத்து காண்பிக்க உஸ்டேஸ் அரசு அரும்பாடுபட்டது. எனினும் இறந்தவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்திலிருந்து 5 லட்சம் வரை இருக்கக்கூடும் என கண்டறியபட்டது.

முகாம்களிள் துன்புறுத்தலுக்கு ஆளாகி இறந்தவர்கள் மட்டும் ஒரு லட்சம் பேர்கள் என கணக்கிடபட்டது. சுமார் 2 லட்சத்திற்க்கும் மேற்பட்டோர் நாடுகடத்தபட்டனர். 2 லட்சம் பேர் மதமாற்றபட்டனர். ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட சிறையில் அடைத்து சித்ரவதை செய்து கொன்றனர்.

யார் இவர்கள் எதற்காக செய்கிறார்கள்?

உஸ்டேஸ- குரோஷிய புரட்சி படையினரான இவர்கள் ரோமன் கத்தோலிக்க பாஸிஸ இனவாத தீவிரவாதிகள். 1929-1945 ல் இந்த அமைப்பு உச்சத்தில் இருந்த காலகட்டம்.
யுகோஸ்லோவியா சுதந்திரம் பெற்ற காலகட்டம் மாகாணத்தின் ஆட்சி செர்பிய மன்னரால் கைபற்றபட்டது. 1941 செர்பியர்கள் அரசுகட்டிலை ஆக்கிரமித்தனர். செர்பியர்கள் குனோஷியர்கள் இருவருமே ஸ்லோவிக் குடிமக்களாக இருந்தபோதும் செர்பியர்கள் ஆர்தொடாக்ஸ் கிருஸ்த்துவர்களாகவும், குரோஷியர்கள் ரோமன் கத்தோலிக்க கிருஸ்த்துவர்களாகவும் இருந்ததே இந்த போட்டிக்கான காரணம்.

1941 யுகொஸ்லோவியாவை நாஸிபடை கைபற்றியது. தனி குரோஷிய மாநிலம் அமைக்கபட்டது. யுத்தக்காலத்தில் தனி குரோஷியாவுடன் முழு ராஜதந்திர உறவை வைத்திருந்த போதிலும் நாஸிகள் மட்டுமே இந்த இனபடுக்கொலைகளுக்கு காரணம் என்று வரலாற்றை திரிக்க முயன்றது இந்த வாடிகன்.

பிரான்ஸிஸ்கன் எனபடும் முன்னால் குருக்கள் இனவதை அட்டூழியங்களில் நேரடியாக பங்கேற்றனர். 1942 ல் ஃபிலிபோவிக் என்ற ப்ரான்ஸிஸ்கன் தலைமையில் ஒரு கிராமத்தின் 500 குழந்தைகள் உட்பட 2730 செர்பியர்கள் படுகொலை செய்யபட்டனர். பின்பு அவன் போர்க்குற்றங்களுக்காக தூக்கிலிடபட்டபோது தனது மதகுரு வஸ்திரத்தை அணிந்திருந்ததாக கூறபடுகிறது.

யுத்தகாலத்தில் அங்கு செர்பியர்கள் மற்றும் யூதர்களிடமிருந்து கொள்ளையடிக்கபட்ட சுமார் 350 மில்லியன் ஸ்விஸ் ப்ராங்க்ஸ் மதிப்புள்ள தங்கத்தை சுவிஸ் வங்கி கணக்கில் அனுப்பியிருந்தான் உஸ்டேஸ் மன்னன். அதில் 150 மில்லியன் மதிப்புள்ள தங்கம் ப்ரிட்டிஷ் படைகளால் கைபற்றபட்டபின் 200 மில்லியன் மதிப்புள்ள தங்கம் வாடிகனை வந்தடைந்தது.

செர்ப்கட்டர் (srbosjek) என்ற விவசாய கத்தியில் மரணதண்டனை வழங்கினர்.

நிகழ்வுகளுக்கு முழுமுதற் காரணமான க்ரோஷிய மதவாத இனவெறியர்களின் இன அழிப்பு கொடுமைகளை கொன்றுக்குவிக்கபட்ட செர்பியகளின் கூடுகளே சாட்சி. யுத்த க்காலத்தில் யூதர்களுக்கு ஆதரவாக இருந்த இந்த செர்பியர்களே 40 ஆண்டுகளுக்கு பின் ஒரு இன அழிப்பை நிகழ்த்தினர்.
-தொடரும்

மதுமிதா தினேஷ்குமார்

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker