முடியாது…முடியாது……இவரால் எல்லாம் முடியாது……ட்விட்டரில் போட்டு தாக்கும் ராமதாஸ்.

தமிழக அரசியலில் திமுக மற்றும் அதிமுக என்று மாறி மாறி கூட்டணி வைத்த அரசியல் செய்தது பாமக.பிறகு 2014 நாடாளுமன்றம் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அதை தொடர்ந்து 2016 சட்டமன்ற தேர்தலில் திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை என்று தனித்து போட்டியிட்டது பாமக.

இதை தொடர்ந்து திமுக மற்றும் பாமக தலைவர்கள் அடிக்கடி வார்த்தைப் போரில் ஈடுப்படுவது உண்டு.

தமிழக அரசை கலைக்க திமுக முயற்சிப்பதாக அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இதைப்பற்றி ட்விட்டரில் கருத்து தெரிவித்து பாமக நிறுவனர் ராமதாஸ் மக்கள் விரும்புமும் நல்ல விஷயங்களை செய்யும் எண்ணமூம் திராணியும் திமுக செயல் தலைவருக்கு இல்லை என்ற ரீதியில் பதிவு போட்டு இருக்கின்றார்.

பலவீனமான அதிமுக எடப்பாடி அரசை கூட திமுக செயல் தலைவரால் ஒன்னுமே செய்ய முடியவில்லை என்று ஸ்டாலின் மீது விமர்சனங்கள் விழுத்து கொண்டே இருந்தது இதற்கிடையில்
சமீபத்தில் நடைப்பெற்ற RK இடைத்தேர்தலில் 18கட்சிகளின் ஆதரவை பெற்று கூட திமுகவால் வைப்புத்தொகையை காப்பாற்ற முடியவில்லை என்ற குற்றசாட்டை பரவலாக திமுக முன்னணி தலைவர்களே ஸ்டாலினின் ஆளுமையை குறை கூறுக்கின்றனர்.

பாமக நிறுவன தலைவர் ராமதாஸ் நேரடியாக திமுக செயல் தலைவர் பற்றி கூறி இருக்கின்ற கருத்து ஏற்கனவே ஸ்டாலின் மீதான விமர்சனத்திற்கு வலு சேர்பதாகவே பார்க்கப்படுக்கின்றது.

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker