எதிர்காலங்களில் பாஸ்போர்ட்டை முகவரி சான்றாக பயன்படுத்த முடியாது – மத்திய அரசு அதிரடி

Last page of the passport will be blank in the new version

இந்திய வெளியுறவுத்துறை பாஸ்போர்ட்டில் முகவரி அடங்கிய இறுதிப்பக்கம் இல்லாமல் புதிய பாஸ்போர்ட்டை வழங்குவது, பாஸ்போர்ட்டின் நிறத்தை ஆரஞ்சு நிறத்திற்கு மாற்றுவது தொடர்பாக மத்திய வெளியுறவுத்துறை பரிந்துரை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குடிமக்களின் தகவல்களை பாதுகாக்கும் பொருட்டு முகவரி நீக்கப்படுவதாக பாஸ்போர்ட் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

தற்போது, இந்திய அரசு தரப்பில் மூன்று நிறங்களில் பாஸ்போர்ட்டு வழங்கப்பட்டு வருகிறது. அரசு பணி அதிகாரிகள் மற்றும் வெளிநாடுகளுக்கு அரசு பணிக்காக செல்பவர்களுக்கு வெள்ளை நிறத்திலான பாஸ்போர்ட்டும், தூதரக அதிகாரிகளுக்கு சிவப்பு நிற பாஸ்போர்ட்டும், பிற மக்களுக்கு நீல நிற பாஸ்போர்ட்டும் வழங்கப்படுகிறது. குடிமக்களுக்கு நீல நிறத்தில் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு வருகிறது,

இந்நிலையில், குடியுறவு சோதனை தேவை நிலையில் உள்ள பாஸ்போர்ட்களை ஆரஞ்சு நிரத்தில் வழங்கும் திட்டம் பரிசீலனையில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பாஸ்போர்ட்கள் புனே நகரில் உள்ள இந்திய பாதுகாப்பு அச்சகம் வடிவமைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Tags

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker