மோடியை பின்னுக்கு தள்ளினார் கெஜ்ரிவால்……Maps of India கருத்துக்கணிப்பில்…

Narendra Modi vs Arvind Kejriwal

மேப்ஸ் ஆப் இந்தியா என்ற இணையதளம் கடந்த 2017−ம் ஆண்டின் இந்தியாவின் சிறந்த அரசியல் தலைவர் யார்? என்ற கருத்துக் கணிப்பை கடந்த ஒரு மாதமாக தனது இணையத்தளத்தில் நடத்தியது.

இதில் சுமார் ஒரு மாதம் நடைபெற்ற கருத்துக்கணிப்பின் முடிவில் 46.3% வாக்குகளை பெற்று கெஜ்ரிவால் முதலிடமும், 42% வாக்குகளை பெற்று மோடி இரண்டாம் இடமும், 8.3% வாக்குகளைப் பெற்று ராகுல் மூன்றாம் இடமும், தொடர்ந்து மம்தா நான்காம் இடமும், நிதீஷ்குமார் ஐந்தாமிடமும், சந்திரசேகர் ரெட்டி ஆறாமிடமும் பெற்றுள்ளனர்.

2012−ல் லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சியை தொடங்கி, டெல்லியில் 70−க்கு 67 சட்டமன்ற தொகுதியில் வெற்றிப்பெற்று டெல்லி முதல்வராகவும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய தலைவராகவும் உள்ளவர் அரவிந்த் கெஜ்ரிவால் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதமர் மோதியை பின்னுக்கு தள்ளி 2017−ல் இந்தியாவின் சிறந்த அரசியல் தலைவராக கெஜ்ரிவாலை மக்கள் தேர்வு செய்து உள்ளதாக Maps of india இணையத்தளம் தெரிவித்து இருக்கின்றது

Tags

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker