ஜெயலலிதாவை ஓரங்கட்டி வரலாற்று வெற்றி பெற்ற தினகரன்!

ஆர்.கே.நகர் இடைத் தேர்தலில் சுயேச்சை வேட்பாளர் டிடிவி தினகரன் அபார வெற்றி பெற்றார். தவிர, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாக்கு வித்தியாசத்தை ஓரங்கட்டி வரலாறு படைத்தார்.

முதல் சுற்றின் வாக்கு எண்ணிக்கை துவங்கி, இறுதி சுற்று வரை தினகரனே முன்னிலை பெற்று வெற்றி பெற்றுள்ளார். தினகரனின் வெற்றி, ஆளும் அதிமுக, எதிர்க்கட்சி திமுகவுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மொத்தம் 19 சுற்றுகள் வாக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற நிலையில், 16வது சுற்றிலேயே தினகரன் வெற்றி உறுதியானது. 16 சுற்று முடிவில் தினகரன் 76,701 வாக்குகளை பெற்றிருந்தார். அவர் வாக்கு வித்தியாசம் 35,175 என இருந்தது.

இந்நிலையில் 19வது சுற்று முடிவுகள் வெளியான நிலையில், தினகரன் 89,013 வாக்குகள் பெற்றார். இது ஒட்டுமொத்தமாக பதிவான வாக்குகளில் 50.32 சதவீதமாகும். அதிமுக.,வின் மதுசூதனன் 48,306 வாக்குகளும், (27.31 சதவீதம்), திமுக.,வின் மருது கணேஷ் 24,651 வாக்குகள் பெற்று டெபாஷிட் இழந்தார்.

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker