உணவே மருந்து

பத்மபிரியா சுரேந்திரன்

 

மஞ்சள் : 

 • அஞ்சரப்பெட்டியில் மிக முக்கிய இடம் பிடுத்துள்ளது மஞ்சள். மஞ்சள்தூளை உணவில் சேர்ப்பது வெறுமனே நிறத்துக்காகவும்,
 • சுவையுக்காகவும் மட்டுமல்ல. மஞ்சள் பல நோய்களுக்கு மருந்தாகவும், நிவாரணியாகவும் பயன்படுகிறது.
 • மேலும் வயதானவர்களுக்கு ஏற்படும் நினைவு குறைபாடு தரும் “அல்சைமர்” நோயை குணப்படுத்த மஞ்சளில் இருக்கும் “குர்க்குமின்” உதவும். இரத்தத்தை சுத்தப்படுத்தும்.
  இத்தனை குணங்களை உடைய மஞ்சளை பாக்கெட்டில் வாங்காமல் நாமே மஞ்சள் கட்டையை பொடி செய்யு வைத்து உபயோகிப்பது உத்தமம். பாக்கெட் மஞ்சளில் நிறத்துக்காகவும்,பாதுகாப்புத் தன்மைகாகவும், இரசாயனங்களை கலக்கப்படுகிறது.
 

கடுகு : 

 • கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது என்பது பழமொழி.இத்தகைய சிறப்பு மிக்கக் கடுகில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. கடுகு உள் உறுப்புக்களை தூண்டும் தன்மையை உடையதால் பசியைத் தூண்டும்.
 • ஆனால் கடுகு மரபணூ மாற்று கடுகாக இருக்கக் கூடாது என்பது மிகமுக்கியம்.
  மரபணூ மாற்று உணவு பொருட்களை உட்கொண்டால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும், நோய் எதிர்ப்பு ஆற்றல் குறையும். ஒவ்வாமை தோன்றும், புதுப்புது நோய்கள் வரும்.
  முக்கியமாக மலட்டு தண்மையை உண்டாக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

மிளகு :

 • நன் முன்னோர்கள் காரத்துக்காக மட்டும் மிளகை பயன்படுத்தவில்லை. மிளகு விஷத்தன்மையை முறிக்கும் ஆற்றல் வாய்ந்தது. ஆம் 10 மிளகு இருந்தால் எதிரி வீட்டிலும் சாப்பிடலாம் என்பார்கள். சளித்தொல்லையை காணாமல் போக்கும் ஆற்றல் பெற்ற மிளகுப்பொடியை, பாக்கெட்டில் வாங்காமல் நாமே அரைத்து பொடி செய்ய வேண்டும்.
 

சீரகம் :

 • அகத்தை சீர் செய்வதால் (சீர்–அகம்) சீரகம் என்று அழைக்கப்படுகிறது. உடலுக்கு குளிர்ச்சியையும், தேகத்தை பளபளப்பாக வைக்கும் ஆற்றல் சீரகத்திற்கு உண்டு.
  சீரகத் தண்ணீரை உட்கொண்டு வந்தால் தேவையற்ற கொலுப்புக்களை குறைத்து உடல் எடையை குறைக்க உதவிடும்.
 

வெந்தயம் : 

 • வயிற்றுக் கோளாறுகளை நீக்கும் , உடலை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள பயன்படும். மேலும் இது உடலில் உள்ள இரத்த ஓட்டத்தை சீராக வைத்துக்கொள்ள உதவும்.
 

பெருங்காயம் : 

 • பெருங்காயம் உணவின் வாசனையும் ருசியையும் மட்டும் கூட்டாது. நமது உடல் வலியையும்.  அஜீரனலணத்தையும் கட்டுப்படுத்தும், வாய்வுத் தொல்லையை குறைக்கும்.
  மேலும் வயிற்றுவலி, வயிறு உப்புசம், போன்ற தொல்லைகளை நீக்கும். மேலும் மலச்சிக்கலை நீக்கி குடல்புழுக்களை அழிக்கும் அற்புத சக்தி பொருங்காயத்திற்கு உண்டு.
 • கலப்படமில்லா சுத்தமான பெருங்காயமானால் அது தண்ணீரில் போட்டவுன் கரைந்து தண்ணீர் பால் போல் வென்மை நிறமாக மாறிவிடும். தீக்குச்சியை பற்றவைத்தவும், கலப்படமில்லா பெருங்காயம் கற்பூரம் போல் பற்றிக்கொண்டு முழுவதுமாக எரிந்துவிடும்.

  இத்தனை மருத்துவ குணங்களை உடைய பொருட்கள், நம் சமையலறையில் இருந்து மறைத்து ,தற்போது அதிக இடத்தை பிடித்திருப்பது வணிகப்பொருள்கள் பாக்கெட் வடிவில்தான்.

  நாம் எடுக்கும் உணவு நமது சீதோசனத்தில் விளைந்த உணவாக இருக்க வேண்டும்.

  Adblock Detected

  Please consider supporting us by disabling your ad blocker