பாரதத்தில் முதல் முறையாக… தமிழகத்தில் சகோதரி நிவேதிதை ரதயாத்திரை ……ஒருங்கிணைக்கிறார் வானதிசீனிவாசன்.

Story Highlights

 • மார்கரெட் எலிசபெத் நோபிள்
 • நிவேதிதை தலையெழுத்தை மாற்றி எழுதிய 1895
 • அன்னை சாரதையின் மகளாய்
 • கொல்கத்தா மக்களால் சகோதரி என்று அழைக்கப்பட்டார்
 • சுதந்திர போராட்ட களத்தில் புயலாக புகுந்தார்.
 • நிவேதிதையின் 150வது ஆண்டு
 • ரத யாத்திரை ஒருங்கிணைப்பாளர் ……வானதிசீனிவாசன்
 • பெண்ணே! நீ மகத்தானவள்!
மார்கரெட் எலிசபெத் நோபிள்

அக்டோபர் 28,1867ல் ஐரிஸ் நாட்டில் டங்கானன் ஊரில் சாமுவேல் ரிச்மாண்ட் நோபிள் (Samuel Richmond Noble) – மேரி இஸபெல் ஹாமில்டன் தம்பதியினருக்கு மூத்த மகளாகப் பிறந்து மார்கரெட் எலிசபெத் நோபிள் (Margaret Elizabeth Noble) என்ற இயற்பெயரைக் கொண்ட சகோதரி நிவேதிதை.

சகோதரி நிவேதிதை ஒரு வயதுக் குழந்தையான பொழுதே அவரது குடும்பம் இங்கிலாந்தின் மான்செஸ்டர் நகருக்கு குடிபெயர்ந்தது ,அங்கு நிவேதிதாவின் தந்தை சாமுவேல் கிருஸ்துவ மதகுருவாக விளங்கினார். தன்னுடைய தந்தை மதகுரு என்பதாலோ என்னவோ ஆரம்பக் காலத்தில் கிறிஸ்தவ மதத்தின் மீது பிடிப்புக் கொண்டிருந்தார் நிவேதிதா, ஆனால் போக போக புத்த மதக் கருத்துகளிலும் ஈடுபாடு கொண்டார்.

இதற்கிடையில் தன்னுடைய கல்லூரி படிப்பை முடித்து 1884-ம் ஆண்டு ஒரு பள்ளியில் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்தார். அதன் பிறகு 1892ல் புதிய கல்வி முறையை குழந்தைகளுக்குக் கற்பிக்க வேண்டி சொந்தமாக ஒரு பள்ளியைத் தொடங்கினார்.


நிவேதிதை தலையெழுத்தை மாற்றி எழுதிய 1895

தன்னுடைய தோழி அழைப்பின் பெயரில் இங்கிலாந்துக்கு வந்து இருந்த சுவாமி விவேகானந்தரை 1895ல் சகோதரி நிவேதிதை சந்தித்த தருணம் தான் ,அவருடைய தலையெழுத்தையே மாற்றி எழுதியது.

பாரத தேசத்தின் வரலாற்று பெருமைகளையும் ,இந்து மதத்தின் தத்துவங்களையும் கோட்பாடுகளையும் பற்றி கூறும் சுவாமி ஜீயின் கருத்தால் ஈர்ப்பு கொண்டு, கிருஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு வந்து தீட்சை பெற்ற முதல் பெண் என்ற பெருமையோடு தன்னுடைய பெயரை நிவேதிதை என்று சுவாமி விவேகானந்தரின் ஆசியோடு 1898ல் இந்தியா வந்து மாற்றி கொண்டார்.


அன்னை சாரதையின் மகளாய்

நாட்டின் முன்னேற்திற்கும் சமுதாயம் முன்னேற்றத்திற்கும் பெண்கள் கல்வியறிவு பெற்று தங்களுடைய பங்களிப்பை ஆற்றவில்லை என்றால் எதுவுமே முடியாது என்ற ஆணித்தரமான கொள்கையை கொண்டு இருந்தவர் நிவேதிதை

அதனால் தான் என்னவோ ஆன்மீக சேவையோடு அடிமைப்பட்டு இருந்த காலத்திலேயே பாரதத்தில் பெண்களுக்கு கல்வியறிவோடு தொழிற்கல்வியும் சேர்த்து கொடுப்பதற்காக கோல்கத்தா நகரில் அன்னை சாரத தேவியின் பொற்கரங்களால் பெண்களுக்கான பள்ளி கூடத்தை திறந்தார்.

எப்பொழுதுமே சுவாமி ஜீயுடன் விதண்டாவாதம் செய்யும் சகோதரி நிவேதிதை, அன்னை சாரதா தேவியின் அன்பால் ஈர்க்கப்பட்டு, தாயிடம் தாய்மொழியில் பேசும் குழந்தைப் போல அன்னையிடம் பேச ,அன்னையின் தாய் மொழியான வங்காளத்தை கற்றார்.


கொல்கத்தா மக்களால் சகோதரி என்று அழைக்கப்பட்டார்.

பாரத தேசத்தில் ஆன்மீக சேவை செய்ய மட்டும் இல்லை மக்களுக்காகவும் சேவை செய்ய தான் நான் வந்தேன் என்று நிருபனம் செய்யும் விதமாக கொல்கத்தா நகரமே பிளேக் நோயால் பாதிக்கப்பட்டு இருந்த பொழுது குடிசை குடிசையாக சென்று மக்களுக்கு மருத்துவ உதவி உட்பட பல உதவிகளை செய்தார்.

மக்களுக்கு சேவை செய்யும் பொழுது உணவு உண்பதற்கு பணமில்லாமல் வெறும் பாலையும் பழங்களையும் உண்டு சேவையாற்றினார்,பின்பு பண நெருக்கடியால் பாலை விடுத்து சேவையாற்றியதால் தான் “சகோதரி நிவேதிதை” என்று கொல்கத்தா மக்களால் அன்போடு அழைக்கப்பட்டார்.


சுதந்திர போராட்ட களத்தில் புயலாக புகுந்தார்.

தன்னுடைய குருவான சுவாமி ஜீ 1902ல் மறைந்தது பெரும் துயரமாக இருந்தாலும், சுவாமிஜீயின் கொள்கைக்களை பாரத முழுவதும் பரப்பி நாட்டை அடிமைத்தனத்தில் இருந்து மீட்டெடுக்க உறுதி பூண்டார்.

அதன் பிறகு சுதந்திர போராட்ட களத்தில் வீருகொண்ட வேங்கையாக புயலேன புகுந்து,சோம்பி அஞ்சி நடுங்கிக்கிடந்தவர்களுக்கு தன்நம்பிக்கையை ஊற்றி விடுதலை உணர்வை தட்டி எழுப்பினார்.

அரவிந்தர்,தாகூர், பாரதியார் போன்றவர்களுக்கு விடுதலை போராட்டத்தில் குருவாக விளங்கியவர்.

நாடு விடுதலை பெற்றால் நாட்டிற்கென தனி கொடி வேண்டுமே என்ற தீர்க்க தரிசணத்தோடு பாரதற்திற்காக வஜ்ராயுதத்தை தாங்கிய கொடியை தேசிய கொடியாக வடிவமைத்தவர் மேலும் விடுதலை போராட்டத்தில் ஆங்கிலேயர்கள் கேட்டு அஞ்சி நடுங்கிய “வந்தே மாதிரம்” பாடலை தான் துடங்கிய பள்ளியில் பாடவைத்தார்.

1911ல் தன்னுடைய 44வயதில் இவ்வுலகை விட்டு மறைந்தார் சகோதரி நிவேதிதை.


நிவேதிதையின் 150வது ஆண்டு

அயர்லாந்தில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்து, இந்திய தேசம் வந்து சகோதரி நிவேதிதையாக மாறி ஆன்மீக சேவையோடு,மக்களுக்கான தொண்டு சேவையும் சேர்த்து பெண்கள் முன்னேற்றத்திற்காக முதல் முதலில் பள்ளியை துவங்கி விடுதலை போராட்டத்தில் ஈடுப்பட்டு எத்தனையோ கலைஞர்களையும் ,சுதந்திர போராட்ட தலைவர்களையும் உருவாக்கி, அவர்களின் வழியே இந்தியாவின் பெருமைகளை ஓங்கச் செய்த சகோதரி நிவேதிதையின் 150வது பிறந்த வருடம் இது.

கலை, கல்வி, போராட்டம், சமூக சேவை என பலவித தளங்களில் நின்று இந்தியாவைப் போற்றிய இந்த தெய்வீகத் துறவின் புகழை தமிழகத்தின் பட்டி தொட்டி எல்லாம் ஒலிக்க செய்திட வேண்டி ரத யாத்திரை நடைபெற இருக்கு.


ரத யாத்திரை ஒருங்கிணைப்பாளர் ……வானதிசீனிவாசன்

தமிழ் மண்ணில் நாத்திகமும் கம்யூனிஸமும் வீரநடை போட்ட காலத்திலேயே, சுவாமி விவேகானந்தரின் கோட்பாடுகளால் ஈர்க்கப்பட்டு கல்லூரி நாட்களில் தேசிய மாணவ அமைப்பான ABVP மூலம் பொது வாழ்வை துவங்கி இன்று பாஜக மாநில பொது செயலாளராக இருப்பவர் தான் திருமதி வானதிசீனிவாசன்.

யாருடைய கொள்கையால் ஈர்க்கப்பட்டு பொது வாழ்வில் உயரத்திற்கு வந்தாரோ அவரின் சீடரான தெய்வ துறவி சகோதரி நிவேதிதைக்கு பாரதத்திலேயே முதல்முறையாக ஸ்ரீராமகிருஷ்ண மடத்தின் ஆசியோடு தமிழகத்தில் நடைபெறும் ரதயாத்திரையை ஒருங்கிணைக்கின்றார் வானதிசீனிவாசன்.


  பெண்ணே! நீ மகத்தானவள்!

  மயிலை ஸ்ரீராமகிருஷ்ணா மடம் மற்றும் ஊளூந்தூர்பேட்டை சாரதா மிஷன் உள்ளிட்ட அமைப்புகளோடு வடலூர் OPR கல்வி நிறுவனம், பெரம்பலூர் ஸ்ரீராமகிருஷ்ணா கல்வி நிறுவனம் போன்ற அமைப்புகளுடன் பல்வேறு கல்லூரி தாளாளர்கள்,முதல்வர்கள் உள்ளிட்டோர்களை ஒன்றிணைத்து தமிழகம் முழுவதும் ரத யாத்திரைக்கான மாநில ஒருங்கிணைப்பு குழு அமைக்கப்பட்டு இருக்கின்றது.

  மேலும் ராமநாதபுரம் ராணி லட்சுமி சேதுபதி அம்மா தலைமையில் ரமேஷ்பிரபா, தமிழச்சி தங்கபாண்டியன் உள்ளிட்டோரை கொண்டு வரவேற்பு குழு அமைக்கப்பட்டு இருக்கின்றது.

  மாநில தழுவிய அளவில் ஜனவ 3 முதல் ஜனவ 6 தேதி வரை மாவட்ட வாரியாக நிவேதிதை பற்றி மகளிருக்கான பேச்சு போட்டி நடைபெற்று கொண்டு இருக்கின்றது. இதில் மாவட்ட வாரியாக வெற்றி பெருக்கின்றவர்களுக்கு மாநில அளவில் போட்டி நடைப்பெற்று, வெற்றி பெறுக்கின்றவர்களுக்கு பிப்ர22ல் சென்னையில் பரிசு கொடுக்க உள்ளனர்.

    

   பெண்ணே!நீ மகத்தானவள் என்னும் தலைப்பில் தமிழகம் முழுவதும் ஜனவரி 22ல் கோவையில் துவங்கும் ரத யாத்திரை 27மாவட்டங்கள் வழியாக 3000கிலோ மீட்டர் பயணமாக 2லட்சம் மாணவிகளை தொடர்பு செய்து பிப்.22 சென்னையில் நிறைவு பெற உள்ளது.

   ரத யாத்திரையின் பொழுது சகோதரி நிவேதிதை தொடர்பான தகவல்களும்,பெண் கல்வி தொடர்பான பரப்புரைகளும்,தேசபக்தி கருத்துக்களும் எடுத்துரைக்கப்பட இருக்கின்றது.

   மேலும் ரத யாத்திரையின் பொழுது சகோதரி நிவேதிதை வாழ்க்கையை எடுத்துரைக்கும் பேச்சாளர்களாக சுகி சிவம்,பாரதி பாஸ்கர் உள்ளிட்டோர் பேச உள்ளனர்.

   சிறப்பு விருந்தினர்களாக மத்திய அமைச்சர்கள் ,தமிழக ஆளூநர்,தமிழக முதல்வர் மற்றும் ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தின் அகில உலகதுணை தலைவர் சுவாமி கௌதமானந்தா மகராஜ் உள்ளிட்டோர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு இருக்கின்றது.

   Tags

   Related Articles

   Adblock Detected

   Please consider supporting us by disabling your ad blocker