எல்லாமே நம்பிக்கை சார்ந்தவை

A.M.K.மணிவண்ணன்

உலகம் வியக்கும் எல்லா செயல்களுக்கும்  நம்பிக்கை என்பது மிக முக்கியமான ஒன்றாகும்! நாம் எப்பேர்ப்பட்ட வல்லவர்கள் என்று உற்றுநோக்கிய ஒவ்வொருவரும் மிகப்பெரிய நம்பிக்கையின் காரணமாக வேறூன்றியவர்கள்! நீங்கள் ஒரு செயலை கடினமான உழைப்பையும் தாண்டி திடமான மனதைரிய நம்பிக்கையால் மட்டுமே செய்து முடிக்க முடியும்! வெவ்வேறான எண்ண அல்ப ஆசைகளால் தினந்தோறும் புதிய திட்டங்கள் என்ற போர்வையில் காரியங்கள் பூரணமாக நடைபெறாது! ஒருவர் மீது தனிப்பட்ட நம்பிக்கை காரணமாக வைக்கும் பற்று இறுதிவரை நீடிக்க வேண்டும் என்றால் அதற்கான பல தடைகளையும்,இடையூறுகளையும் தாண்டி புரிதல் உணர்வோடு கொண்டு செல்ல வேண்டும்! இன்று உங்கள் தனிப்பட்ட வலி,வேதனைக்காக ஒருவரின் ஆறுதல்,அன்பை,நட்பை ஏற்படுத்திவிட்டு நாளை இதைவிட நல்ல,பின்னர் அதைவிட நல்ல என்ற ரீதியில் உறவுகளை மாற்றிக் கொண்டே இருந்தால் அந்த உறவு நம்பிக்கை சார்ந்தது இல்லை! அது வியாபார ரீதியானது! மண் ஆண்ட மன்னர்களுக்கும், மனம் ஆண்ட துறவிகளுக்கும், இருந்த விடா முயற்சியான பற்று என்பது அவர்கள் கையாண்ட நம்பிக்கை!


இன்றைய காலகட்டத்தில் இது இல்லை என்றால் அது, அதுவும் இல்லை என்றால் மற்றொன்று என்று எவ்வளவு தப்பு, தவறுகள் நடக்கிறது! இவை எல்லாம் நம்பிக்கை சார்ந்தவைகளா? அவை எப்படி நல்ல சமூகமாக இருக்க முடியும்! அவர்களால் உருவாக்க படுபவர்கள் என்ன சிறந்தவைகளை செய்வார்கள்! இன்று உலகம் கையாண்டு கொண்டு இருக்கும் நவீனங்கள் எல்லாம் தனிமனித,மற்றும் குழு முயற்சியில் உருவாக்கப்பட்டவை!

இன்று உலகின் அனைவரின் கைகளில் இருக்கும் கைப்பேசியை எவ்வளவு முயற்சி, இழப்பு, பொறுமை என்று நம்பிக்கையின் பேரில் போராடி உருவாக்கி இருப்பார்கள்! சாதாரணமாக ஒரு செயலை தொடங்குவதைவிட முழு நம்பிக்கையோடு செய்ய வேண்டும்! அது மட்டும் இல்லை! இஷ்டப் பட்டு கஷ்டப்பட்டால் அதன் பலன் மிக அபரிமிதமானதாக இருக்கும்! விரதங்கள், நோன்பு இவைகளில் எப்போதும் ஒரு கணக்கு உண்டு இவைகள் எல்லாம் நம்பிக்கைகள் சார்ந்தவை எல்லா வகையான உணவுகளும் எளிதாக கிடைக்கும் சூழ்நிலையில் உள்ள ஒருவன் பசியும் இருந்து உணவை வேண்டாம் என்றால் அது விரதம்! உணவுக்கே வழியில்லாமல் எப்போது கிடைத்தாலும் சாப்பிட்டுவிடலாம் என்று சூழல் இருந்தால் அது விரதம் இல்லை பட்டினி! அப்பா மகனுக்கு கொடுக்கும் சீதனம் வாழ்க்கைக்கான படிக்கட்டு,அம்மா மகளுக்கு கொடுக்கும் சீதனம் அன்பிற்கான அணைக்கட்டு,கணவனுக்கு மனைவி தரும் முதல் சீதனம் என்பது அவளது கற்பு இவைகள் எல்லாமே நம்பிக்கை சார்ந்தவை!

இன்று குடும்ப உறவுகளுக்குள் பகைமை பாராட்டு அதிகமாகி அன்பு தன்மை குறைய காரணமாக இருப்பது எது நம்பிக்கை இழப்பு!,இன்று இவ்வளவு விவாகரத்து நடக்க காரணம் என்ன? நம்பிக்கை இழப்பு! இவைகளை எல்லாம் மீட்க தேவை நம்பிக்கை! யாராவது ஒருவர் பெரியமனதுடன் விட்டுக்கொடுப்பது மிக அவசியம்! அது இறுதி காலத்தில் கண்ணீரோடு நினைவு செய்யும்!
( நம்பிக்கை தொடரும்)
A.M.K.மணிவண்ணன்.

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker