புதுவை அரசியலில் பகையையும் ஈகோவையும் ……மறக்கடித்த சகோதரி நிவேதிதை……மக்கள் ஆச்சிரியம்

சகோதரி நிவேதிதை 150வது பிறந்த வருடத்தை முன்னிட்டு ஜனவரி 22ல் கோவையில் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் நடிகர் விவேக் துவங்கி வைத்த ரத யாத்திரை 27மாவட்டங்களின் வழியாக 3000கி.மீ பயணம் செய்து சென்னையில் Feb 22ல் முடிவடைக்கின்றது.

இதற்கிடையில் Feb 8 புதுவைக்கு சகோதரி நிவேதிதை ரதம் வருகை தர இருக்கின்றது அதை முன்னிட்டு நடைப்பெற்ற மாபெரும் சைக்கிள் பேரணியை புதுவை ஆளுநர் கிரண் பேடி துவங்கி வைத்தார். இதில் முன்னாள் புதுவை முதல்வர் ரங்கசாமி, புதுவை பொதுப்பணித்துறை அமைச்சர் நாமச்சிவாயம் மற்றும் பாஜக நியமன உறுப்பினர் செல்வகணபதி உள்ளிட்டோர்கள் கலந்து கொண்டனர்.

புதுவை அரசியல் களத்தில் எதிர் எதிர் துருவங்களாக இருக்கின்ற காங்கிரஸ் VS பாஜகவும், ஆளூநர் VS புதுவை அரசும் வேற்றுமைகளை மறந்து சகோதரி நிவேதிதை பெயரில் ஒன்றிணைந்து பொது நிகழ்ச்சியில் கலந்து கொண்டது புதுவை மக்களிடம் ஆச்சிரியம் கலந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker