நிவேதிதை ரத யாத்திரைக்கான அலோசனை கூட்டம்……கோவையில் நடைப்பெற்றது.

சகோதரி நிவேதிதை 150வது பிறந்த வருடத்தை முன்னிட்டு தமிழக முழுவதும் 27மாவட்டங்களின் வழியாக ரத யாத்திரை செல்ல இருக்கின்றது.

இதற்காக மாநிலத்தில் பல்வேறு துறைகள் பிரிக்கப்பட்டு மாவட்ட வாரியாக குழுக்களும் அமைக்கப்பட்டு இருக்கின்ற,அந்தந்த துறையின் ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் பங்கு கொண்ட அலோசனை கூட்டம் கொங்கு கலை&அறிவியல் கல்லூரியில் நடைபெற்றது.

இந்த அலோசனை கூட்டத்தில் சுவாமி விமூர்தானந்தா மகராஜ் கலந்து கொண்டு ஆசி வழங்க மாநில யாத்திரை ஒருங்கிணைப்பாளர் வானதிசீனிவாசன் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து தொகுத்து வழங்கினார் இறுதியில் RSS கோவை விபாக் பிரச்சாரக் திரு சுரேஷ் நிறைவுரையாற்றினார்.

இந்த நிகழ்ச்சிக்கு இடையில் ரத யாத்திரை தொடர்பான வலைதளம் மற்றும் செயலியை முறையே கே.எம்.சி.எச் துணைத்தலைவர் Dr.தவமணி D பழனிசாமி மற்றும்
எஸ்.எஸ்.வி.எம் கல்வி நிறுவனங்களின் நிர்வாக அறங்காவலர் டாக்டர்.மணிமேகலை மோகன் வெளியிட்டனர்.கொங்கு கல்லூரி செயலாளர் வாசுகி உடன் இருந்தார்

Tags

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker