குஜராத்தில் காங்கிரஸ் நாயகன் அகமத் படேல் தான் ! ராகுல் இல்லை

காங்கிரஸ் கட்சியில் ராகுல் காந்தியை முன் நிறுத்தி சந்தித்த பல்வேறு தேர்தல்களில் குஜராத்தை தாண்டி காங்கிரஸ் கட்சியின் செயல்பாடுக்கள் ஒன்றும் சொல்லி கொள்ளும் படியில்லை.

அதிலும் தொடர்ந்து 22 ஆண்டுகளாக குஜராத்தை பாஜக தன்னுடைய இரும்பு பிடியில் வைத்து இருந்தது மேலும் பிரதமர் நரேந்திர மோதி மற்றும் பாஜக தேசிய தலைவர் அமித்ஷாவின் சொந்த மாநிலம் என்பதால் இந்த தேர்தல்  மிகவும் எதிர்பார்க்கப்பட்டது.

குஜராத்த சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வருவதற்கு முன்பு வந்த அனைத்து கருத்து கணிப்புமே காங்கிரஸ் ஆதாள பாதாளத்தில் இருந்ததாகவே சொல்லி வந்தது

தேர்தல் நாட்கள் சொல்ல சொல்ல எதிரிக்கு எதிரி நண்பன் என்ற அடைமொழிக்கு ஏற்ப பாஜகவை வீழ்த்த வேண்டும் என்ற முனைப்பில் இருந்த ஹர்திக் படேல்,பிற்படுத்தபட்டோர் இனத்தை சார்ந்த அல்பேஷ் தாக்கோர் மற்றும் தலித் இனத்தை சார்ந்த ஜிக்னேஷ் மேவானி ஆகியோர்களோடு காங்கிரஸ் தேர்தல் உடன்பாடுகளை ஏற்படுத்தி கொண்டு களத்தில் முன்னேறியது.

பல மாநில தேர்தல்களில் கூட்டணி அமைப்பதில் சொதப்பிய ராகுல் காந்தி குஜராத் தேர்தலில் பாஜகவை பொது எதிரிகளாக பார்க்கின்றவர்களை காங்கிரஸ் கட்சியின் கொடைக்கு கீழ் கொண்டவந்தாக சொல்லபடுவதில் தான் மிக பெரிய பொய் இருக்கின்றது. இவ்வளோ பெரிய கூட்டணி சகாகள் காங்கிரஸ் கட்சிக்கு அமைந்தத்தற்கு ராகுல் காந்தி காரணம் இல்லை காங்கிரஸ் வென்றால் முதல்வர் என்ற கனவோடு இருந்த சோனியா காந்தியின் அரசியல் ஆலோசகர் அகமத்படேல் தான் காரணம்.

அகமத்படேல் வகுத்து கொடுத்த தேர்தல்  வியூகத்தை அப்படியே கண்ணை மூடிக் கொண்டு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பின்பற்றியதால் தான் காங்கிரஸ் கட்சி குஜராத் தேர்தலில் 77 இடங்களை பெற்று வலுவான எதிர்கட்சியாக உருவாகியுள்ளது.

இதற்கு முந்தைய காலங்களில் சங்கர் சிங் வகேலா இருந்த வரை மாநில அரசியலில் நுழையாமல் இருந்த சோனியா காந்தியின் ஆலோசகர் அகமத் படேல் ,சங்கர் சிங் வகேலா காங்கிரஸ் கட்சியை விட்டு விலகிய உடனே குஜராத் மாநில காங்கிரஸ் மீது தன்னுடைய பார்வையை திரும்பினார் ,குஜராத்தில் காங்கிரஸ் கட்சியை வெற்றி பெற வைக்கின்றேன் என்று தலைமையிடம் வாக்கு கொடுத்துவிட்டது குஜராத்தில் முகாமிட்டு 30-40 இடங்களில் கூட தோறாது என்று தொண்டர்களாலே அவநம்பிக்கையில் இருந்த காங்கிரஸ் கட்சியை மீட்டெடுத்தது அகமத்படேல் தானே தவிர ராகுல் காந்தி இல்லை.

காங்கிரஸ் கட்சி ராகுல் காந்தி தலைமையில் எழுச்சி பெற்றது என்றால் குஜராத் தேர்தலோடு நடைபெற்ற ஹிமாசல் சட்டமன்ற தேர்தலில் மொத்தம் உள்ள 68 சட்டமன்ற தொகுதிகளில் ஆளும் கட்சியான காங்கிரஸ் கட்சி வெறும் 21இடங்களில் மட்டும் பெற்று பாஜகவிடம் ஆட்சியை பறிகொடுத்தது.

குஜராத் மற்றும் ஹிமாசல் சட்டமன்ற தேர்தல் சமையத்தில் உபி மாநிலத்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் ராகுல் காந்தியின் சொந்த தொகுதியான அமேதி தொகுதிக்கூட்பட்ட அமேதி நகராட்சியை பாஜக காப்பற்றி விட்டது மேலும் ஏற்கனவே நடைப்பெற்ற உபி சட்டமன்ற தேர்தலில் அமேதி பாராளுமன்றம் தொகுதிக்கூட்பட்ட 5சட்டமன்ற தேர்தலில் 4தொகுதிகளை பாஜக கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

தன்னுடைய சொந்த தொகுதி மற்றும் பல்வேறு மாநிலத்தில் தேர்தல் பரப்புரைக்கு தலைமையற்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் தேர்தல் வியூகம் காங்கிரஸ் கட்சிக்கு தோல்வியை தான் கொடுத்து இருக்கின்றதே தவிர எழுச்சியை அல்ல

குஜராத்தில் காங்கிரஸ் கட்சியின் ஒரளவு எழுச்சிக்கு சோனியா காந்தியின் அரசியல் அலோசகர் அகமத்படேல் தான் காரணமே தவிர காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இல்லை

ப.யுவராஜ்

வழக்கறிஞர்

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker