வைரமுத்து,வைதியநாதனை கண்டித்து ஆர்ப்பாட்டம் ……கோவையில் வானதிசீனிவாசன் பங்கேற்பு

இந்துகளால் தெய்வபிறவியாக போற்றப்படுக்கின்ற ஆழ்வாரான ஆண்டாள் தாயாரை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த வைரமுத்துவையும் அந்த நிகழ்ச்சிக்கு ஏற்படு செய்த தினமணி ஆசிரியருக்கும் எதிராக தமிழகத்தில் பாஜக,பாமக மற்றும் பல்வேறு இந்து அமைப்புகளிடம் இருந்து கடுமையான எதிர்ப்பு கிளம்பி இருக்கின்றது.

இதை தொடர்ந்து இன்று ஶ்ரீவில்லிபுத்தூர் ஜீயர் சுவாமிகள் தலைமையில் கோவை பெரிய கடைவீதி கரடி கோவிலுக்கு முன்பு நடைப்பெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பாஜக மாநில பொது செயலாளர் வானதிசீனிவாசன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அப்பொழுது வானதிசீனிவாசன் அவர்கள் பேசியது ‘ஜீயர் சுவாமிகள் சொல்லியது போல வைரமுத்து மற்றும் தினமணி வைதியநாதன் இருவரும் ஆண்டாள் தாயார் சன்னதியில் மன்னிப்பு கேட்டு அருள் பெறவேண்டும் அப்படி அவர்கள் ஆண்டாள் சன்னதிக்கு வர மறுக்கும் பட்சத்தில் உண்ணாவிரதம் துவக்கப்படும் என ஜீயர் சுவாமிகள் அறிவித்து உள்ளதற்கு முழுமையான ஆதரவு கொடுத்து அதற்கு பாஜக துணை நிற்கும் என்று தெரிவித்தார்.

 

Tags

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker