மத்திய பட்ஜெட் 2018-19: முக்கிய அம்சங்கள்

10 கோடி ஏழை குடும்பங்களின் சுகாதாரத்திற்காக தலா ரூ.5 லட்சம் ரூபாய் வழங்கப்படும். இதற்காக ரூ.1200 கோடி ஒதுக்கீடு. இது உலகின் மிகப்பெரிய மருத்துவத்திட்டம்.

* கிராமச் சாலைகள் மேம்பாட்டில் அரசு முழு கவனம் செலுத்தும்.

* விவசாயிகளின் விளைபொருட்கள் ஏற்றுமதியை ஊக்குவிக்கும் பொருட்டு நாடு முழுவதும் பிரமாண்டமான உணவு பூங்காக்கள் அமைக்கப்படும்.

* டெல்லி, ஹரியானா, பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களுக்கு காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்த சிறப்பு நிதி உதவி.

* அடுத்த ஒரு வருடத்துக்குள்தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் மேலும் 2 கோடி கழிப்பறைகள் கட்ட நடவடிக்கை.

* 3 நாடாளுமன்ற தொகுதிக்கு ஒரு அரசு மருத்துக்கல்லூரி வீதம் 24 மருத்துவக்கல்லூரிகள் அமைக்கப்படும்.

* குஜராத்தின் வதோதரா நகரில் ரயில்வே பல்கலைக்கழகம் அமைக்கப்படும்.

* பிடெக் மாணவர்கள் 1000 பேருக்கு பிஎச்டி படிக்க நிதியுதவி வழங்கப்படும்.

* விவசாய கழிவுகளை எரிக்காமல் பயன்படுத்த புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.

* வரும் ஆண்டுக்கான விவசாயக்கடன் இலக்கு ரூ 11 லட்சம் கோடியாக உயர்த்தப்படும்.

* சுமார் 2 கோடி கழிப்பறைகள் ஒரு வருடத்தில் தூய்மை இந்தியா திட்டம் மூலம் கட்டப்படும்.

* 2022ம் ஆண்டுக்குள் அனைவருக்கும் வீடு.

* அனைவருக்கும் வீடு திட்டத்துக்கு ரூ.750 கோடி ஒதுக்கீடு.

* 4 கோடி ஏழை வீடுகளுக்கு மின் இணைப்பை இலவசமாக வழங்க முடிவெடுத்துள்ளோம்.
* 24 புதிய அரசு மருத்துவ கல்லூரிகள் அமைக்கப்படும்.

* இந்திய வேளாண் பொருட்கள் ஏற்றுமதி துறையின் மதிப்பு 100 பில்லியன் டாலர் மதிப்பு கொண்டது.

* உணவுப்பதப்படுத்துதல் துறைக்கு ரூ.1400 கோடி நிதி ஒதுக்கீடு.

* இனிமேல் கால்நடை வளப்போர், மீனவர்களுக்கு கிசான் கிரடிட் கார்டு (kisan credit card) வழங்கப்படும். இதுவரை விவசாயிகளுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வந்தது.

* உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் 8 கோடி கிராமப்புற பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு (LPG) இணைப்பு வழங்க முடிவு.

* மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.75,000 கோடி வழங்க முடிவு.

* 42 வேளாண் பூங்காக்கள் அமைக்கப்படும்

* விவசாய சந்தைகளை மேம்படுத்த ரூ.2000 கோடி ஒதுக்கீடு.

* வேளாண் துறையில் ரூ.500 கோடி நிதியுடன் ஆப்பரேசன் க்ரீன் எனும் திட்டம் செயல்படுத்தப்படும்.

* மீன்வளத்துறைக்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு

* வேளாண்மை, கிராம மேம்பாடு, சுகாதாரம், அடிப்படை கட்டமைப்பு உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

* நாட்டின் இயற்கை வளங்கள் நேர்மையான முறையிலும், வெளிப்படையாகவும் ஏலம் விடப்படுகின்றன.

*விவசாயிகளின் வருமானத்தை 2020- ம் ஆண்டுக்குள் இருமடங்காக உயர்த்தும் வகையில் மத்திய அரசு சில திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

*மோடி தலைமையிலான அரசு 2014ம் ஆண்டு பொறுப்பேற்றது. மத்திய அரசின் முதல் மூன்று ஆண்டுகளில் நாட்டின் பொருளாதார வளர்ச்சியை 7.5% ஆக தக்கவைத்துள்ளோம். 8% வளர்ச்சியை அடைவதில் உறுதியாக உள்ளோம்.

*உலகின் 7வது வளர்ந்துவரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

*நேரடி அந்நிய முதலீடு அதிகரித்துள்ளது.

*அதிவேகமாக வளர்ந்துவரும் நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.

*வறுமையை குறைப்போம் என்று எங்கள் அரசு வாக்கு கொடுத்தது. கொடுத்த வாக்கை நிறைவேற்றிவிட்டோம்.

*2018-19ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் உரையை வாசிக்க தொடங்கினார் அருண் ஜெட்லி.

*பட்ஜெட் உரைக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள நிலையில் முதல்முறையாக பட்ஜெட் உரை இந்தி மொழியில் வாசிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அருண் ஜெட்லி பட்ஜெட் உரையில் பெரும்பலான பகுதிகளை இந்தியிலும்,சில முக்கிய பகுதிகளை ஆங்கிலத்திலும் வாசிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.

*பட்ஜெட் எதிரொலி – பங்கு சந்தைகள் ஏற்றத்துடன் துவங்கியது.

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker