அருண் ஜேட்லி 2018-19 பட்ஜெட் சாதாரண இந்தியர்களுக்கு உதவுமா?

2018-19ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சராக 4வது முறை தாக்கல் செய்கிறார் ஜேட்லி

2018-19ஆம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நாளை மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தாக்கல் செய்யவுள்ள நிலையில், வருமான வரி, தங்கத்தின் மீதான இறக்குமதி வரி ஆகியவை குறைக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.

பிரதமர் மோடி தலைமையிலான அரசு, தனது ஐந்தாண்டு கால ஆட்சியில் தாக்கல் செய்யும், முழு அளவிலான கடைசி பட்ஜெட் இதுவாகும். நாடாளுமன்றத் தேர்தலை குறிவைத்து பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்பதால், மாத சம்பளம் பெறுவோர் பயனடையும் வகையில், வருமான வரி விலக்குக்கான வரம்பு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக, சமானிய மக்களை திருப்தி படுத்தும் வகையில், புதிய திட்டங்கள், மகாத்மா ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு கூடுதல் நிதி, ஊரக குடியிருப்புகள், நீர்பாசனத் திட்டங்கள், பயிர்காப்பீடு ஆகியவற்றுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டிய கட்டாயத்தில் மத்திய அரசு இருக்கிறது.

ஜிஎஸ்டி வரி நடைமுறைக்கு வந்தபின் சிறுதொழில்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது என்ற குற்றச்சாட்டு நிலவி வருகிறது. அதை சரிக்கட்டும் விதத்தில் சில சலுகைகளையும் ஜேட்லி அறிவிக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்.

மருத்துவ செலவுக்கான வரிச்சலுகை வரம்பு 15 ஆயிரம் ரூபாய் என கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட நிலையில், தற்போது 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படலாம் என்று கூறப்படுகிறது.

பொது பட்ஜெட்டுடன், ரயில்வே பட்ஜெட்டும் இணைக்கப்பட்டுள்ளது. ரயில்வே துறையை நவீனமயமாக்க மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதால், ரயில்வே திட்டங்கள் குறித்த முக்கிய அறிவிப்புகளும் வெளியாகும் என கூறப்படுகிறது.

Tags

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker