இந்திய வரலாற்றில் முதல் முறையாக உச்சநீதிமன்ற நீதிபதிகள் 4 பேர் செய்தியாளர் சந்திப்பு

  • இதுவரை இல்லாத நிகழ்வாக உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகளாக பணியாற்றுபவர்கள் செய்தியாளர்களை சந்திக்கின்றனர்
  • வரலாற்றிலேயே முதல் முறையாக பணியில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் செய்தியாளர்களை சந்திக்கின்றனர்
  • நீதியரசர் செல்லமேஸ்வர் மற்றும் மூன்று நீதிபதிகள் செய்தியாளர்களை சந்திக்க உள்ளனர்
  • கடந்த சில மாதங்களாக சுப்ரீம் கோர்ட் நிர்வாகத்தில் விரும்பத்தகாத நிகழ்வு நடந்து வருகிறது. சுப்ரீம் கோர்ட் நிர்வாகம் தற்போது முறையானதாக இல்லை. சுப்ரீம் கோர்ட்டில் ஜனநாயகம் இல்லை. தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னை சரி செய்யப்படவில்லை என்றால் ஜனநாயகத்தை காக்க முடியாது என கருதுகிறோம். ஜனநாயகத்திற்கு சுதந்திரமான நீதிபதி தேவை. இப்படியே போனால், ஜனநாயகம் நிலைக்காது. நீதித்துறைக்கு எங்களை போன்ற மூத்த நீதிபதிகள் பொறுப்பானவர்கள் என்பது எங்களது கருத்து.
  • சில மாதங்களுக்கு முன் தலைமை நீதிபதிக்கு கடிதம் அனுப்பினோம். குளறுபடிகளுக்கு பதில் இல்லை. எங்கள் முயற்சி தோல்வியடைந்தது. சில விஷயங்கள் முறைப்படி நடக்க வேண்டும் என வலியுறுத்தினோம். சில விஷயங்கள் முறைப்படி பின்பற்றப்படவில்லை. தலைமை நீதிபதியிடம் முறையிட்டும் பயனில்லை. வேறு வழியில்லை என்பதால் தான் மக்கள் மத்தியில் பேச வேண்டும் என முடிவெடுத்தோம். எங்களது கவலைகளை மக்களுக்கு தெரிவிக்க விரும்புகிறோம்

Related Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker